Page Loader
11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்?
AI-தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆதித்யா ஐயர் என்ற போலியான நபர்

11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்?

எழுதியவர் Siranjeevi
Feb 18, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

AI என்ற செயற்கை நுண்ணறிவு உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர். அந்த வகையில், சமீப நாட்களாக ஆதித்யா ஐயர் என்ற இளைஞர் தான் இளசுகளின் மனம் கவர் கள்வனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நண்பர்களுடன் சில் செய்வதும், புத்தகம் வாசிப்பதும், சமையல் செய்வதும் என இவரது போஸ்ட்கள், இளம் பெண்களின் மனங்களை கொள்ளைக் கொள்வதாக தான் இருக்கின்றன. இப்படி பல திருப்பங்களுடன் வலம் வரும் யார் இந்த நபர் என்று பார்த்தால் அது தான் அவர் ஒரு நபரே இல்லை. ஆம், AI தொழில்நுட்பத்தின் மூலம், ஆதித்யா ஐயர் என்பதை உருவாக்கி இன்ஸ்டா அக்கவுண்டை திறந்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு

யார் இந்த ஆதித்யா ஐயர் - உருவாக்க காரணம் என்ன?

எனவே, AI தொழில்நுட்பத்தின் மூலம் பாரத் மேட்ரிமோனி தங்களது நிறுவனத்தின் விளம்பரத்துக்காக இவரை டெவெலப் செய்துள்ளது. இவரி பக்கத்திற்கு மட்டும் இன்ஸ்டாகிராமில் 11,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் வந்துள்ளனர். மேலும், காதலர் தினத்தையொட்டி சில தினங்களுக்கு முன் உருவாக்கப்பட்டார் ஆதித்யா ஐயர். பெரும் எதிர்பார்ப்புடன் இவரது ஃபாலோவர்கள் காத்திருந்தபோது தான், உண்மையான மனிதர் அல்ல என்ற உண்மையை வெளியிட்டது நிறுவனம். ஆதித்யா ஐயரை உருவாக்க காரணமே உண்மையான காதலை தேடுபவர்கள், நிஜ மனிதர்களுடன் இணைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே இந்த கேம்பெயின் நடத்தப்பட்டதாக பார்த் மேட்ரிமோனி தெரிவித்ததுள்ளது. மேலும், அப்படி ஒருவரை தேடி வருகிறீர்கள் என்றால் பாரத் மேட்ரிமோனியை அணுகுங்கள் எனவும் விளம்பரப்படுத்தியிருந்தது.