10 ஆண்டுகளில் மனித குலம் அழியுமா? பகீர் கிளப்பும் AI முன்னணி நிறுவன அதிகாரி
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலத்தை அழிக்கும் சாத்தியக்கூறுகள் அறிவியல் புனைகதைகளை தாண்டி, தற்போது நிஜ உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. AI துறையின் முன்னணி நிறுவனமான ஆந்திரோபிக் அமைப்பின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் எவன் ஹூபிங்கர், அடுத்த 10 ஆண்டுகளில் AI காரணமாக மனித இனம் ஒட்டுமொதாக அழிய 10 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கவலை
ஆராய்ச்சியாளர்களின் ராஜினாமாவும் கவலைகளும்
Anthropic நிறுவனத்தில் முன்-பயிற்சி பிரிவில் பணியாற்றி வந்த முன்னணி ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் ஆந்திரோபிக் ஆகிய இரு நிறுவனங்களும் பொறுப்பற்ற முறையில், மனிதக் கட்டுப்பாட்டை மீறும் சுய-மேம்பாட்டு சூப்பர்இன்டலிஜென்ஸை உருவாக்க போட்டியிடுகின்றன என்றும், மனிதர்களின் உயிரோடு விளையாடுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இவரின் கூற்றை வழிமொழிந்த எவன் ஹூபிங்கர், "நாங்கள் நிஜமாகவே AI மனிதர்களை அழிக்கக்கூடும் என்று நம்புகிறோம்; ஆனால் சூப்பர்இன்டலிஜென்ஸைக் கட்டுப்படுத்தும் தெளிவான திட்டம் எங்களிடம் இன்னும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடற்ற ஆபத்து
சுய-மேம்பாடும் கட்டுப்பாடற்ற ஆபத்துகளும்
தற்போதைய மாடல்களால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், மனித தலையீடின்றி AI தானாகவே தன் திறன்களை வளர்த்துக்கொள்ளும் 'ரிகர்சிவ் செல்ஃப்-இம்ப்ரூவ்மென்ட்' முறையில் சூப்பர்இன்டலிஜென்ஸ் உருவாகும்போது சிக்கல் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்தில் ஹக்கிங் பேஸ் மற்றும் பிற இணையதளங்களில் நூற்றுக்கணக்கான AI ஏஜென்ட்கள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவங்கள், கட்டுக்கடங்காத AI தொழில்நுட்பத்தின் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை மணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
எதிர்காலம்
துறையின் எதிர்காலமும் கட்டுப்பாடுகளும்*
ஓபன்ஏஐ-ன் சமீபத்திய மாடல்கள் மற்றும் என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் கூற்றுகள் AI வேகமாக ஏஜிஐ (AGI) கட்டத்தை எட்டி வருவதைக் காட்டுகின்றன.
இத்தகைய சூழலில், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்குள்ளான போட்டிகளைக் குறைத்து, AI திறன்களை மேம்படுத்துவதற்கு தற்காலிகத் தடைகள் அல்லது கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜேக்கப் காக்சன் போன்ற நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
If you are a lab researcher, I urge you to consider what the next few years will actually feel like. Do you want to kick off a superintelligent RL run without a rigorous understanding of its mind? Should you put your head down because “it’s happening anyway” - or take this moment…
— Jacob Coxon (@hilbertspaess) September 9, 2026