ட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!
ட்விட்டர் ப்ளூடிக் கட்டண கொள்கைக்கு பின், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, Verified பேட்ஜ் பெறுவதற்கான கட்டணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே, இணைய பயனர்களுக்கு மாதத்திற்கு $11.99 மற்றும் iOS இயங்குதளங்களில் மாதத்திற்கு $14.99 என சந்தா தொடங்கும் எனக்கூறப்படுகிறது. இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.1,000 வருகிறது. இந்த கட்டண பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை அரசாங்க ஐடி மூலம் வெரிஃபை செய்து கொள்ளலாம். இந்த வாரம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் முதல் முறையாக இந்த சேவை அமல் படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கும் கட்டண கொள்கை - எவ்வளவு?
மேலும், சுயவிவர சரிபார்ப்புடன், Instagram மற்றும் Facebook-க்கான சந்தா தொகுப்பு, போலி ஐடி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சரிப்படுத்த கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இதனிடையே, இது குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவிக்கையில், "இந்த வாரம் நாங்கள் Meta Verified - சந்தா சேவையை வெளியிடத் தொடங்குகிறோம்., இது உங்கள் கணக்கை அரசாங்க ஐடி மூலம் வெரிபைட் செய்து, நீல நிற பேட்ஜைப் பெறவும், போலி ஐடிகளை நீக்கவும் உதவும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அம்சம், சேவைகள் முழுவதும் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதாகும் எனவும், இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மற்றும் விரைவில் பல நாடுகளில் வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.