
சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்து முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 126 நாட்கள் பூமியில் இருந்து பயணம் செய்த ஆதித்யா L1 விண்கலம், இன்று மாலை 4 மணியளவில், முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் உள்ள ஹேலோ சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.
பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை சுற்றி காந்தப்புலன்கள் மற்றும் ஈர்ப்புவிசைகள் இருக்கும், அந்த காந்தப்புலன்களும் ஈர்ப்புவிசைகளும் இருக்கும் இடத்தில இருந்து ஆய்வை மேற்கொண்டால் பல இடையூறுகள் ஏற்படும்.
சவ்க்க்
இந்தத் திட்டம் ஏன் முக்கியமானது?
அப்படிப்பட்ட இடையூறுகள் ஏதும் இல்லாத, சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் ஒரு புள்ளியை லெக்ராஞ்சு புள்ளி என்று அழைக்கிறார்கள்.
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே அந்த புள்ளி இருக்கிறது.
அந்த புள்ளியை ஆதித்யா-எல்1 இன்று அடைந்துவிட்டதால், ஒரே இடத்தில் நிலைத்திருந்து சூரியனை விரிவாக ஆய்வு செய்து துல்லியமான கணிப்புகளை ஆதித்யா எல்1-ஆல் வழங்க முடியும்.
மேலும், சூரியனில் இருந்து வரும் சூரிய கதிர்கள் மற்றும் கொரோனால் மாஸ் எஜெக்ஷன் என பூமியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள் தோன்றக்கூடும்.
எனவே, சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களை உடனடியாக அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சூரியனைப் பற்றிய புரிதலையும் வளர்த்து கொள்ள முடியும்.