NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்!
    சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்!
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 15, 2023
    03:49 pm
    சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்!
    சனி கோளின் புதிய நிலவுகளைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் விண்வெளியில் அதிக நிலவுகளைக் கொண்ட கோள் என்ற பெயரை சனியிடம் இருந்து தட்டிப்பறித்தது வியாழன். தற்போது சனி கோளைச் சுற்றி மேலும் புதிய நிலவகள் கண்டறியப்பட, சூரிய குடும்பத்திலேயே அதிக நிலவுகள் கொண்ட கோள் என்ற பெயரை மீண்டும் பெற்றிருக்கிறது சனி. சனி கோளைச் சுற்றி 62 புதிய நிலவுகளைக் கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து 145 நிலவுகளுடன், அதிக நிலவுகளைக் கொண்ட கோளாகியிருக்கிறது சனி. முன்னர் 92 நிலவுகளுடன் அதிக நிலவுகளைக் கொண்ட கோளாக வலம்வந்து கொண்டிருந்தது வியாழன். புதிய நிலவுகளைக் கண்டறிய நெப்ட்யூன் மற்றும் யுரேனஸ் கோள்களின் நிலவுகளைக் கண்டறியப் பயன்படுத்திய, 'ஷிப்ட் அண்டு ஸ்டேக்' முறையைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

    2/2

    புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு!

    இந்த புதிய நிலவுகளைக் கண்டறிவதற்கான முயற்சி 2019-ம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பல வருடங்கள் சனி கோளைக் கண்காணித்து, அதனைச் சுற்றி வருபவை நிலவுகள் தான் விண்கற்கல் அல்ல என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கின்றனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள நிலவுகளில் பெரும்பாலான நிலவுகள் சீரற்ற நிலவுகளாக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். சாதாரண நிலவுகள் குறைவான சாய்மானத்தைக் கொண்ட, குறுகிய நீள்வட்டப்பாதையில் கோள்களைச் சுற்றி வரும். சீரற்ற நிலவுகள் என்பபடுவை, அதிக சாய்மானத்தைக் கொண்ட பெரிய நீள்வட்டப்பாதையில் கோள்களைச் சுற்றி வருபவை. சனியின் நிலவுகளில் 121 நிலவுகள் சீரற்ற தன்மையைக் கொண்டவையாகவே இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதிக நிலவுகளைக் கொண்ட கோளாக மட்டுமல்லாமல், சூரிய குடும்பத்திலேயே 100-க்கும் மேற்பட்ட நிலவுகளைக் கொண்ட ஒரே கோளாகவும் இதன் மூலம் அறியப்படவிருக்கிறது சனி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விண்வெளி

    விண்வெளி

    சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்? இஸ்ரோ
    அழிந்து கொண்டிருக்கும் சனி கோளின் வளையம்.. ஆராய்ச்சியில் இறங்கிய நாசா! நாசா
    புறக்கோளில் நீராவி இருப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி! நாசா
    நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்!  நாசா
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023