பூமியின் மிகப்பழைமையான உயிரின ஆதாரம்! ஜார்க்கண்ட் பாறைகளில் 350 பில்லியன் ஆண்டுகள் பழமையான நுண்ணுயிரி படிமங்கள் கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த புவியியலாளர் த்ரிஸ்ரோதா சௌத்ரி தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பூம் பாறைப் பகுதியில் பூமியின் மிகப்பழைமையான உயிரின படிமங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை சுமார் 350 பில்லியன் (3.5 பில்லியன்) ஆண்டுகள் பழமையானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் ஆரம்பகால கண்டப் பாறைகளில் ஒன்றான இங்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.
ஜாம்ஷெட்பூர்
ஜாம்ஷெட்பூர் அருகே கண்டறியப்பட்ட நுண்ணுயிரி சமூக அடையாளங்கள்
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள பிதார்தாரி பகுதியில் உள்ள பழமையான பாறைகளில் கருப்பு மற்றும் வெள்ளை வரிகள் வடிவிலான அமைப்புகள் கண்டறியப்பட்டன.
இவை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒற்றை செல் நுண்ணுயிரிகளின் படிமங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிக அரிதான நிகழ்வாக, நன்கு பாதுகாக்கப்பட்ட உயிரியல் பொருட்களும், வயதை துல்லியமாகக் கணக்கிட உதவும் ஜிர்கான் படிகங்களும் ஒரே பாறையில் அமைந்திருந்ததால், பாறையின் வயதையும் உயிரினங்களின் காலத்தையும் நேரடியாக இணைத்து ஆய்வு செய்ய முடிந்தது.
ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி
ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பமும் வேதியியல் சான்றுகளும்
350 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கார்பன் டை ஆக்சைடை கரிமப் பொருட்களாக மாற்றும் அதிநவீன வேதியியல் திறனை இந்த நுண்ணுயிரிகள் பெற்றிருந்தன என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மூலம் பாறையில் உள்ள கார்பன் அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த கார்பன் பாறையின் அதிகபட்ச வெப்பநிலையான 324 முதல் 369 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே சூடேற்றப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்த கார்பன் பின்னாள்களில் உருவானது அல்ல, பாறை உருவான தொடக்க காலத்திலிருந்தே இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜிர்கான் படிகங்கள்
ஜிர்கான் படிகங்கள் மூலம் துல்லியமாகக் கணக்கிடப்பட்ட காலம்
பாறையின் துல்லியமான வயதைக் கண்டறிய ஆய்வாளர்கள் எட்டு ஜிர்கான் படிகங்களை விரிவாக ஆய்வு செய்தனர்.
ஜிர்கான் மாதிரிகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈயத்தின் விகிதத்தை ஆய்வு செய்த போது, நான்கு படிகங்கள் 350 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதிப்படுத்தின.
சர்வதேச அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பகுப்பாய்வு, பூமியின் ஆரம்பகாலக் காலநிலை மற்றும் உயிரினங்களின் தோற்றம் குறித்த பல புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
முதன்மை உயிரினங்கள்
தீவிர வேதியியல் சூழலில் வாழ்ந்த பூமியின் முதன்மை உயிரினங்கள்
"செயல்பாட்டில் இருந்த எரிமலைகள், இரும்பு மற்றும் சிலிக்கா நிறைந்த கடல்கள் அடங்கிய தீவிரமான வேதியியல் சூழலிலும் 350 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடக்ககால உயிரினங்கள் செழித்து வாழ்ந்துள்ளன என்பதை எங்கள் ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என புவியியலாளர் த்ரிஸ்ரோதா சௌத்ரி தெரிவித்துள்ளார்.
பூமியில் உயிரினங்கள் எப்போது, எப்படித் தோன்றின என்பது குறித்த அறிவியல் தேடலில், இந்தியப் புவியியலாளர்களின் இந்த கண்டுபிடிப்பு உலகளவில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.