உலகம் முழுவதும் 283 மில்லியன் பழைய ஸ்மார்ட்ஃபோன்கள் அனுப்பபட்டுள்ளது! அதிர்ச்சி அறிக்கை;
புதுப்பிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய ஏற்றுமதி 2022 ஆம் ஆண்டில் 282.6 மில்லியன் யூனிட்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று IDCயின் அறிக்கை தெரிவிக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த அறிக்கைப்படி 2021 ஆம் ஆண்டில், 253.4 மில்லியன் மதிப்பில் ஸ்மார்ட்ஃபோனின் வளர்ச்சி 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2021 முதல் 2026 வரையிலான 10.3 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் (CAGR), 2026 இல் 99.9 பில்லியன் டாலர் மதிப்பில், 413.3 மில்லியன் யூனிட் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ஆகும் என்றும், ஐடிசி கணிப்பின் படி இந்த வளர்ச்சி தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐடிசி அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
எனவே உலக அளவில், புதிய ஸ்மார்ட்போன் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் டிரேட் இன் திட்டங்களின் படி முக்கிய காரணமாக உள்ளது. மேலும், அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற முதிர்வடைந்த சந்தைகளில், சில்லறை விற்பனை சார்ந்த விளம்பரங்கள் மூலம் புதுப்பிப்பு சுழற்சிகளை விரைவுபடுத்துவதில் டிரேட்-இன் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. புதிய சந்தைகளில் அதிக விலையுடைய சாதனங்களும் இதே போன்ற சுழற்சியை தான் ஏற்படுத்தின. இறுதியில், குறுகிய விளிம்பு நிலையில், விற்பனையாளர் அல்லது இருவரின் ஒட்டுமொத்த லாபத்தையும் பாதிக்கும். எனவே உலகளவில் கடந்த ஆண்டு 283 மில்லியன் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டுள்ளன.