உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி!
உங்கள் தலைமுடி என்பது, அழகாக ஸ்டைல் செய்வதற்கு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியதைப் பற்றியும் வெளிப்படுத்தும். முடி உதிர்தல் முதல் எதிர்பாராத நிற மாற்றங்கள் வரை, நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பட்பு பற்றி, உங்கள் கூந்தல் அவ்வப்போது உங்களுக்கு சில சிமிஞ்சைகளை வழங்குகிறது. உங்கள் உடல்நலனைப் பற்றி, உங்கள் முடி எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம். அதிகப்படியான முடி வளர்ச்சி, PCOS ஐக் குறிக்கலாம்: பெண்களே, உங்கள் முகம், மார்பு அல்லது முதுகில், அதிகப்படியான முடி வளர்ந்தால், அது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமின் அறிகுறியாக இருக்கலாம். இது ஒரு ஹார்மோன் கோளாறு, அதிகப்படியான ஆன்ட்ரோஜன் ஹார்மோன்களை உற்பத்தி ஆவதால், தேவையற்ற இடங்களில் அதிகப்படியான முடி வளர்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு இருக்கும்போது, முடி உதிர்தல் அதிகரிக்கிறது
முடி உதிர்தல், இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கலாம்: உங்கள் தலைமுடி, இயற்கையான வளர்ச்சி மற்றும் உதிர்தல் சுழற்சியைக் கொண்டுள்ளது. ஆனால், வழக்கத்தை விட அதிகமான முடி உதிர்வை கண்டால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். முடி அடர்த்தி குறைவு, தைராய்டு பிரச்சனைகளைக் குறிக்கலாம்: தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும் போது, உங்கள் கூந்தலின் அடர்த்தி குறைகிறது. தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் சோர்வு, வறட்சி ena மேலும் பல சில அறிகுறிகளும் தென்படும். நரை முடி, வைட்டமின் பி12 குறைபாட்டைக் குறிக்கும்: இளம் நரை என்பது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வகை வைட்டமின், ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் நிறமிக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.