Page Loader
உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா?
இந்நாளில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை தேர்ந்தெடுங்கள்

உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2023
09:08 am

செய்தி முன்னோட்டம்

'உலக சுகாதார தினம்', ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும், திட்டமிடுதல் அவசியமாகிறது. சமீப காலங்களில் அதிகரித்து வரும் நோய் தொற்றுகளும் நம்மை, முழு உடல் பரிசோதனையை தேர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறது. இந்நாளில், முழு உடல் பரிசோதனையின் அவசியத்தை பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள். முழு உடல் பரிசோதனை என்பது வணிகமயமாகி விட்டது என பலர் சொல்வார்கள். எனினும், உங்கள் மருத்துவரை அணுகி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், முழு உடல் பரிசோதனைக்கு உங்களை ஈடுபடுதல் அவசியம். குறிப்பாக 40 வயதை நெருங்குபவர்கள், இப்போதே தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுப்பது அவசியமாகிறது.

உடல் ஆரோக்கியம்

முழு உடல் பரிசோதனை எதற்காக?

உடலில் உள்ள பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல்: உங்கள் உடலில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். அதனால், ஆரம்பகட்ட சிகிச்சையிலேயே, அதை சரி செய்துகொள்ள முடியும். நாள்பட்ட நோய்களைத் தடுத்தல்: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களின் சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான தகுந்த சிகிச்சைகளை தேர்வு செய்ய உதவுகிறது. வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளை கண்டறிதல்: முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய முழு உடல் பரிசோதனை உதவும். அதனை தொடர்ந்து, மருத்துவர்கள், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உங்களுக்கு பரிந்துரைப்பர்.