குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள்
கோடைக் காலங்களை விட, குளிர் காலங்களே நமது சருமத்துக்கு எதிரியாக உள்ளது. குளிர்காலங்களில் வீசும் குளிர் காற்றானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, நமது தோலை வறண்டதாக மாற்றுகிறது. இதனால் உங்கள் தோல் வரட்சியாகி அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. மேலும் குளிர்காலங்களில் குளிருக்கு இதமாக நெருப்பின் அருகில் உட்கார நினைத்தாலும் கூட அது உங்கள சருமத்தை பாதிக்கும். எனவே குளிர்காலங்களில் உங்கள் சருமத்தை பாதுகாக்க கொஞ்சம் கூடுதலாக சருமப்பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியதாகிறது. இது போல குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து நீங்கள் பாதுகாத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
குளிர்க் காலத்தில் சருமத்தை காத்துக்கொள்ள இதோ சில டிப்ஸ்கள்
குளிர்க்கலாம் வந்தாலே நம்மில் பலர் தண்ணீர் குடிப்பதை குறைத்து கொள்கிறோம். ஆனால் இது மிகவும் தவறானது. இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சரும வறட்சி ஏற்படுகிறது. குளிர்காலங்களில் கூட நம் உடலுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. குளிர்க் காலங்களில் காலை, மாலை என இருவேளைகளிலும் 'எண்ணெய் மசாஜ்' செய்து கொண்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது சரும வறட்சியை தடுத்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குளிர் காலங்களில் பருவகால உணவுகளை சாப்பிடுங்கள். உதாரணமாக பீட்டா கரோட்டின் நிறைந்த பூசணிக்கா, கேரட் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இது செல் புதுப்பித்தலுக்கு உதவுவதுடன் சரும செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.