வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் இன்று, ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டு கொண்டப்படுகிறது. தமிழர்கள் வரலாற்றுப்படியும், தமிழ் நாட்காட்டிபடியும், நாளை புது வருடம் துவங்குகிறது.
கோடை காலத்தின் துவக்கமாகும் இது. சங்கம் வளர்த்த மதுரையில், இந்த புத்தாண்டை, சித்திரை திருவிழாவாக கொண்டாடுவார்கள்.
அதில் ஒரு பாகமாக மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும்.
சரி, இந்த நாளன்று, நம் வீட்டில் என்ன சமைக்கலாம் என குழம்புபவர்களுக்கு இந்த கட்டுரை.
புத்தாண்டின்போது, அறுசுவைகளும் அடங்கிய விருந்து சமைக்க வேண்டும் என்பது ஐதீகம்.
அதன்படி, இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என ஆறு சுவைகள் உள்ளடக்கிய உணவு வகைகளை தேர்வு செய்து சமைக்கலாம்.
card 2
மா, பலா, வாழை மூக்கனிகளும் சேர்க்கலாம்
கல்கண்டு சாதம்: இனிப்பு சுவைக்காக இந்த கல்கண்டு சாதம் செய்யலாம். பச்சரிசியை, கல்கண்டு, முந்திரி, நெய் போன்றவற்றை சேர்த்து சமைக்கலாம்
வேப்பம்பூ ரசம்: கசப்பு சுவைக்காக இந்த ரசம். இதில் கிருமி நாசினி தன்மையும் இருப்பதால், இது உடலுக்கும் மிகவும் நல்லது.
மங்கா பச்சடி: இந்த உணவில், புளிப்பு, துவர்ப்பு, என பல சுவைகள் அடங்கி உள்ளன. மாங்காய், வெல்லம், மிளகாய் என சேர்த்து சமைக்கவும்.
வாழைக்காய் வறுவல்: இந்த உணவு காரத்திற்காக எடுத்துக்கொள்ளலாம். இதனுடன், பருப்பு வடை, சாம்பார், கூட்டு, பாயசம் மற்றும் அப்பளம் சேர்த்து, வாழை இலையில் ஆரோக்கியமாக உண்டு, புத்தாண்டை கொண்டாடலாம்.
பானகம்:வெல்லம், சுக்கு, ஏலக்காய் என பல பொருட்களை கொண்டு செய்யப்படும் ஆரோக்கிய பானம் இந்த பானகம்.