Page Loader
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும் 
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும் 

எழுதியவர் Nivetha P
Apr 12, 2023
03:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. விடுமுறை தினம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய விரைவார்கள். இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருக்கடியினை தவிர்க்க தமிழக அரசு ஓர் முடிவினை எடுத்துள்ளது. அதன்படி தமிழ் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு, வரும் 13ம் தேதி(நாளை) 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதே போல், ரம்ஜான் பண்டிகை வரும் 22ம் தேதி வருகிறது. அதனால் 21 மற்றும் 22 தேதிகளிலும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post