உங்கள் எடையை சரிபார்க்க சிறந்த நேரம் மற்றும் முறை எது?
உடல் எடை நமக்கு சாதாரணமாகவே மாறுபடும். நீங்கள் எடை இழக்கிறீர்களா, கூடுகிறீர்களா, அல்லது ஏற்றஇறக்கமில்லாமல் இருக்கிறீர்களா போன்றவற்றை சிறப்பாகக் கண்காணிக்க, சில டிப்ஸ்களை பார்க்கலாம். எடையை சரிபார்க்க, காலை நேரம் சிறந்தது: காலையில் எழுந்தது சிறுநீர் கழித்தவுடன் உங்களை எடையை சரிபார்ப்பது சிறந்ததாகும். நீங்கள் உண்ணாத பொழுதும், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருக்கும் பொழுதும் எடையை சரிபார்ப்பது சரியானதாக இருக்கும். லேசான ஆடை: எடையை சரிபார்க்க நேரம் மட்டும் ஒரு காரணி இல்லை. உடல் எடையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை கண்காணிக்க, நீங்கள் அணிந்திருக்கும் ஆடையும் ஒரு காரணமாக இருக்கலாம். லேசான உடைகளை அணிந்து எடையை சரிபார்க்கலாம். சமமான மேற்பரப்பில் கருவியை வைத்து, அசையாமல் நின்று எடையை சரிபார்க்க வேண்டும்.
எடையை சரிபார்க்க சிறந்த முறையை பார்க்கலாம்
அளவிடுவதற்கு வேறு கருவியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: மிக முக்கியமாக, வேறு எங்கும் எடை சரிப்பார்க்காதீர்கள். ஒரே இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். மற்ற இயந்திரங்களை பயன்படுத்துவது உடல் எடையின் அளவில் சில மாற்றங்களை காண்பிக்கும். எடை அளவீடுகள் எப்போதும் துல்லியமானவை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் எடை கருவியில் அளவீடு செய்யும் முன் எடையை துல்லியமாக 0.000 பவுண்டுகளாக அமைத்து கொள்ளுங்கள். இதனால் துள்ளிமான எடையை நீங்கள் கணக்கிட முடியும். உடல் எடையை குறைக்கும் நோக்கில் இருப்பவர்கள், ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க முயற்சிப்பது, உங்களது உடல் ஆரோக்கியதிற்கு நல்லது.