VIROSH: கூர்க் பழங்குடியினரின் 'கொடவா' திருமண சடங்கு முறையை தெரிந்துகொள்வோம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா இன்று ராஜஸ்தானின் உதய்ப்பூரில் தெலுங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். எனினும், நடிகை ராஷ்மிகா மந்தனா கூர்க் பகுதியை சேர்ந்தவர் என்பதால், அவரது திருமணத்தில் 'கொடவா' சடங்குகள் முக்கியத்துவம் பெற்றன. இன்று மாலை இந்த ஜோடி கொடவா முறைப்படி மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் என செய்திகள் கூறுகின்றன. இந்த சமயத்தில் இந்த கலாச்சார முறை பற்றி தெரிந்துகொள்வோம்.
கலாச்சார முறை
'கொடவா' கலாச்சார முறை
இந்து திருமணங்களில் ஐயர்களை கொண்டு செய்யப்படும் பூஜை போன்ற சடங்குகள் இங்கு இருக்காது. மாறாக, குடும்ப பெரியவர்களின் ஆசீர்வாதமும், குல மரபுகளுமே இந்தத் திருமணத்தின் மையப்புள்ளியாக இருக்கின்றன. திருமணத்தன்று அதிகாலையில் மணமக்கள் இருவருக்கும் மஞ்சள் மற்றும் புனித நீர் கொண்டு பெரியவர்கள் நீராட்டுவார்கள். இது உடல் மற்றும் மனத்தூய்மைக்காகச் செய்யப்படுகிறது. கொடவா இனப் பெண்கள் சேலை கட்டும் முறை மிகவும் தனித்துவமானது. சேலையின் மடிப்புகள் முன் பக்கம் இருப்பதற்கு பதிலாக பின் பக்கம் இருக்கும். போர்வீரர் மரபைக் கொண்டவர்கள் என்பதால், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகரவும், வேலை செய்யவும் ஏதுவாக இந்த முறை உருவாக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பிறகு, வாலகா எனப்படும் பாரம்பரிய மேளதாளங்கள் முழங்க, போர் வீரர்களின் நடனம் ஆடப்படும்.
தனித்துவம்
கலாச்சாரத்தின் தனித்துவம்
கொடவா திருமணங்கள் தற்போதைய நவீன காலத்திலும் தங்களின் பூர்வீக அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் நடத்தப்படுகின்றன. ராஷ்மிகா - விஜய் திருமணத்தில் காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் சடங்குகள் நடைபெற்றது. தென்னிந்தியாவின் இரு வேறு கலாச்சாரங்களின் சங்கமமாக அமைந்தது. ஆடம்பரம் என்பதை விட, தங்களின் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த சடங்குகள் அமைகின்றன.