சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி தொப்பையை குறைக்கும் வினோதமான வொர்க்அவுட் வைரலாகிறது
சமூக ஊடகங்களின் வருகையால், ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றது. சில நேரங்களில், அந்த வீடியோக்கள் ரசிக்க வைத்தாலும், பல நேரங்களில் அது வினோதமாக இருக்கும். இப்படியும் நடக்குமா என நம்மை தலைமுடியை பிய்த்துக்கொள்ள வைக்கும். அப்படி ஒரு விசித்திர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு அக்குபிரஷர் நிபுணர் ஒருவர், சப்பாத்தி கட்டை கொண்டு, தொப்பையை குறைக்கும் 'வித்தையை' கற்று தருகிறார். தற்போது வைரலான இந்த வீடியோவை சிராக் பர்ஜாத்யா என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த 'வித்தையை' கற்றுக்கொள்ள, ஆண்கள் பெண்கள் என ஒரு பெரிய குழு வேறு! இந்த வீடியோ தற்போது வரை 554K வியூஸ்களை பெற்றுள்ளது.