குளிர் காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் 5 காய்கறிகள்
பருவகாலத்தில், குளிர்காலத்திலும் நோய் கிருமி தொற்றுக்கள் அதிகரிக்கும். அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும். அதற்கு, வேர் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஓவ்வொரு வேர் காய்கறிக்கும் ஒவ்வொரு தனித்துவமான ஊட்டச்சத்து நிரம்பியுள்ளது. அவை உங்கள் உடல்நலனை மேம்படுத்துவது மட்டுமின்றி, உடல் சோர்வையும் நீக்க உதவுகிறது. அவை என்னென்ன காய்கறிகள் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்! சர்க்கரை வள்ளி கிழங்கு: இதில், நார்ச்சத்து, வைட்டமின் C, மாங்கனீசு, வைட்டமின் A நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் ஆசிட் அந்தோ சையானின்கள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் பெருமளவு காணப்படுகின்றன. குளிர் காலத்தில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இந்த கிழங்கு உதவுகிறது. மேலும், இது செரிமானத்திற்கும் சிறந்தது
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள்
பீட்ரூட்: இந்த காயில் நைட்ரைட்டுகள் அதிகம் உள்ளது. அது, ரத்த நாளங்களை விரிவுபடுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இஞ்சி: இஞ்சியில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவு காணப்படுகிறது. அதனுடன் ஜிஞ்சரால் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் குடலில் இருந்து வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. அதோடு, Migraine பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை தங்கள் உணவில் சேர்த்து வருவதன் மூலமாக அதிலிருந்து நிவாரணம் பெறலாம். நூல்கோல்: வைட்டமின் C, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம் நிறைந்த நூல்கோல் தினசரி சேர்ப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுகிறது. கேரட்: கேரட்டில் கராட்டினாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. அது புற்றுநோயை எதிர்த்து போராடவும், கண்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.