
உலர்ந்த திராட்சை நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
செய்தி முன்னோட்டம்
உலர்ந்த திராட்சை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமடைந்த ஒரு உணவு பொருளாகும்.
இந்நிலையில், தற்போது உலர்ந்த திராட்சை நீரும் பிரபலமடைந்து வருகிறது.
உலர்ந்த திராட்சை நீரை தயாரிப்பது எளிதானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான சாத்தியமான நன்மைகளையும் இதில் உள்ளது.
திராட்சை நீர் என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் அது வழங்கக்கூடிய சாத்தியமான நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உலர்ந்த திராட்சை ஊறவைக்கப்டும் நீர் தான் உலர்ந்த திராட்சை நீர் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு இரவு முழுவதும் உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைப்பதால், அதில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துகள் அனைத்தும் ஊறவைக்கப்பட்ட தண்ணீருக்கு செல்கிறது.
ஆரோக்கியம்
உலர்ந்த திராட்சை நீரின் தனி சிறப்பு
இந்த உலர்ந்த திராட்சை நீர், மற்ற மூலிகை டீகளைப் போலவே, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படுகிறது.
திராட்சையில் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், அது தண்ணீரில் ஊறவைக்கப்படும் போது, அவை அந்த நீரேற்றத்தை திரவமாக வெளியிடுகின்றன.
திராட்சை தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் நீர் அளவை நீங்கள் சீராக வைத்திருக்கலாம். இது இது நீரிழப்பை தடுக்க உதவுகிறது.
கூடுதலாக, திராட்சையில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகள் தண்ணீருக்கு இனிப்பு சுவையை வழங்குவதால், இந்த நீர் சுவையாகவும் இருக்கும் என்பது இதன் தனி சிறப்பாகும்.
எனவே, ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்களுக்கு கூட இந்த நீரை கொடுத்தால் அவர்கள் இதை ருசித்து குடிப்பார்கள்.