இனிப்பு பிரியர்களே, சர்க்கரையில் இத்தனை வகை உண்டென்று தெரியுமா?
உணவில், இனிப்புசுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், உணவின் தோற்றத்தையும் மாற்றக்கூடிய சர்க்கரையில், பல்வேறு வகைகள் உண்டென்பதை அறிவீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து வகை சர்க்கரைகள் இங்கே: வெள்ளை சர்க்கரை: கிரானுலேட்டட் அல்லது டேபிள் சர்க்கரை என்றும் அழைக்கப்படும், வெள்ளை சர்க்கரை, சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. , கரும்பு அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்குகளை சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது குளிர் பானங்கள் மற்றும் பேக்கிங் பொருட்களுக்கு இனிப்புசுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. பழுப்பு சர்க்கரை: பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த சர்க்கரையில், கேரமல் சுவை நிரம்பியுள்ளது. இது படிக சுக்ரோஸ் மற்றும் வெல்லப்பாகிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சர்க்கரை கரீபியன், ஐரோப்பா, பிரேசில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீரழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் தேங்காய் சர்க்கரை
கரும்பு சர்க்கரை: வெள்ளைச் சர்க்கரையை விட நிறைய சத்துக்கள் நிறைந்த கரும்புச் சர்க்கரை, கரும்பின் சாற்றைக் கொதிக்க வைத்து, சுத்திகரிக்கப்படாத வெல்லப்பாகுகளைப் பெற்று, பின்னர் அவற்றை படிகமாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.இந்த சர்க்கரை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. மஸ்கோவாடோ சர்க்கரை: பார்படாஸ் சர்க்கரை என்றும் அழைக்கப்படும் இவ்வகை, வழக்கமான சர்க்கரையை விட குறைவாக சுத்திகரிக்கப்படுகிறது. மஸ்கோவாடோ சர்க்கரை, காபி போன்ற சுவை கொண்டது. இது, சாஸ் போன்ற உணவுகளுக்கு கேரமல் சுவையை சேர்க்கிறது. தேங்காய் சர்க்கரை: இவ்வகை சர்க்கரை, தேங்காய் பூக்களின் அமிர்தத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் சர்க்கரை உருகிய பிறகு, ஒருவித பழுப்பு நிறத்தைப் பெறுகிறது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.