பொங்கல் ஸ்பெஷல்: நீங்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு வெல்ல வகைகளின் பட்டியல்
உடல் நலத்தை பேண, சமீப காலங்களில் பலரும் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் நிறைந்த, வெல்லத்தில் பல வகை உண்டு என்பதை அறிவீர்களா? பனை வெல்லம்: பனை மரங்களின் சாறில் இருந்து தயாரிக்கப்படுதால், பனை வெல்லம் என்று பெயரிடப்பட்ட இந்த வெல்லம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நிறைந்தது. உங்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது செரிமானத்தையும் சீர் செய்கிறது. கரும்பு வெல்லம்: பாரம்பரிய முறை படி, கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வெல்லம், எடை இழப்புக்கு உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கல்லீரலை சுத்தீகரிக்கவும், சுவாச பிரச்சனைகளைக்கு அருமருந்தாகவும் இருக்கிறது.
தேங்காய் வெல்லம்
தேங்காய் வெல்லம்: புளிக்காத தேங்காய் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் வெல்லத்தில், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மேலும் இந்த வெல்லத்தில் சுக்ரோஸ் இல்லை. இது தொண்டை புண், இருமல் மற்றும் சளி பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்கிறது என்று கூறப்படுகிறது. மறையூர் வெல்லம்: கேரளாவின் இடுக்கி மாவட்டம், மறையூர் கரும்பு உற்பத்திக்கு பெயர் பெற்றது. அங்கிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு இப்பெயர். பாரம்பரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்த வெல்லம், மறையூர் மற்றும் காந்தளூர் பகுதிகளில் உள்ள கரும்பு வயல்களில் பயிரிடப்படுகிறது. தென்னிந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும், இந்த வெல்லம் முத்துவ பழங்குடியின விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.