LOADING...
வெயிலைத் தணிக்க ஒரு சில்லென்ற பயணம்! கூட்ட நெரிசலற்ற தமிழ்நாட்டின் டாப் 5 கோடை கால சுற்றுலா இடங்கள்
தமிழ்நாட்டின் குறைந்த செலவிலான டாப் 5 கோடை கால சுற்றுலாத் தலங்கள்

வெயிலைத் தணிக்க ஒரு சில்லென்ற பயணம்! கூட்ட நெரிசலற்ற தமிழ்நாட்டின் டாப் 5 கோடை கால சுற்றுலா இடங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டின் கோடை கால சீசன் தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் தங்களது விடுமுறையைக் கழிக்க மலைப்பிரதேசங்களை நோக்கி திட்டமிட்டு வருகின்றனர். பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் இக்காலத்தில் கடும் போக்குவரத்து நெரிசலையும், அதிகப்படியான கூட்டத்தையும் சந்திக்கின்றன. இதற்கு மாற்றாக, அமைதியான சூழலையும் குளுமையான தட்பவெப்பநிலையையும் வழங்கும் தமிழ்நாட்டின் 5 சிறந்த 'ஆஃப்-பீட்' (Off-beat) சுற்றுலாத் தலங்கள் இதோ:

இயற்கையின் மடி

சிறுமலை (திண்டுக்கல் மாவட்டம்)

கொடைக்கானலுக்கு மிக அருகில் இருந்தாலும், கூட்டம் குறைவாகவும் அமைதியாகவும் இருக்கும் இடம். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை உங்கள் மனதிற்கு இதம் தரும். சிறப்பு: சிறுமலை பழைய ஊர், அகஸ்தியர்புரம் மற்றும் சிறுமலை காபி தோட்டங்கள். செல்வது எப்படி: திண்டுக்கல்லில் இருந்து வெறும் 25 கிமீ தொலைவில் உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயிலில் வருபவர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ் அல்லது வாடகை கார் மூலம் செல்லலாம்.

அமைதியான மலைக்கிராமம்

ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்)

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி, நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பட்ஜெட் சாய்ஸ். சிறப்பு: புங்கனூர் ஏரி படகு சவாரி, இயற்கை பூங்கா மற்றும் நிலாவூர் ஏரி. செல்வது எப்படி: சென்னை அல்லது பெங்களூருவில் இருந்து வருபவர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 20 கிமீ தூரத்தில் ஏலகிரி உள்ளது. திருப்பத்தூரில் இருந்தும் அரசுப் பேருந்துகள் வசதி உள்ளது.

Advertisement

சாகச பிரியர்களின் சொர்க்கம்

கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்)

சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடம். 70 கொண்டைஊசி வளைவுகளைக் கடந்து செல்வதே ஒரு தனி அனுபவம். சிறப்பு: ஆகாய கங்கை அருவி, எட்டிக்குளி அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவில். செல்வது எப்படி: நாமக்கல்லில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. சேலம் அல்லது நாமக்கல்லில் இருந்து பேருந்துகள் மூலம் சேந்தமங்கலம் சென்று, அங்கிருந்து கொல்லிமலைக்குச் செல்லும் பேருந்துகளைப் பிடிக்கலாம்.

Advertisement

மேகங்கள் முத்தமிடும் மலைப்பாதை

வால்பாறை (கோயம்புத்தூர் மாவட்டம்)

தேயிலைத் தோட்டங்களின் நடுவே ஒரு குளுமையான பயணம். இங்கு வனவிலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பும் அதிகம். சிறப்பு: சோலையார் அணை, நீரார் அணை மற்றும் பாலாஜி கோவில். செல்வது எப்படி: பொள்ளாச்சியில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் இருந்து நேரடியாகவும் பேருந்துகள் உள்ளன.

தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து

ஜவ்வாது மலை (திருவண்ணாமலை மாவட்டம்)

இயற்கை எழில் கொஞ்சும், இன்னும் அதிகம் வணிகமயமாக்கப்படாத ஒரு அழகான மலைப்பகுதி. சிறப்பு: பீமன் அருவி, காவலூர் தொலைநோக்கி மையம் மற்றும் படகுத் துறை. செல்வது எப்படி: வேலூர் அல்லது திருவண்ணாமலையில் இருந்து செல்லலாம். வேலூரிலிருந்து சுமார் 70 கிமீ தொலைவில் உள்ளது. போளூர் வழியாக அரசுப் பேருந்துகள் மூலம் ஜவ்வாது மலையை அடையலாம்.

Advertisement