LOADING...
போன் பார்த்தபடி டாய்லெட்டில் அமர்ந்தால் மூல நோய் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்; 5 நிமிட விதிதான் தீர்வு
போன் பார்த்தபடி டாய்லெட்டில் அமர்ந்தால் மூல நோய் வருவதற்கு 46% கூடுதல் வாய்ப்புகள் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

போன் பார்த்தபடி டாய்லெட்டில் அமர்ந்தால் மூல நோய் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்; 5 நிமிட விதிதான் தீர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
07:20 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய டிஜிட்டல் உலகில், 66% பெரியவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது கையில் செல்போனுடனேயே செல்கின்றனர். செய்திகளைப் பார்ப்பது முதல் சமூக வலைதளங்களை மேய்வது வரை நீளும் இந்த பழக்கம், மூல நோய் ஏற்படும் அபாயத்தை 46% அதிகரிப்பதாக PLOS ONE' இதழில் வெளியான புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பின்னணி

நீண்ட நேர அமர்வு ஏற்படுத்தும் அழுத்தம்

கழிவறையில் போன் பார்த்தபடி நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உங்கள் உடலுக்குச் செய்யும் தீங்குகள் பின்வருமாறு:- இரத்த நாளங்களில் வீக்கம்: நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, மலக்குடல் பகுதியில் அழுத்தம் அதிகரித்து, அங்குள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. இதுவே மூல நோயாக மாறுகிறது. திசுக்களின் பலவீனம்: குடல் இயக்கத்திற்குத் தேவையான இணைப்புத் திசுக்கள் அதிக அழுத்தத்தால் காலப்போக்கில் பலவீனமடைந்து சிதைந்து போகின்றன. இரத்த ஓட்டம் பாதிப்பு: அதிக நேரம் அமர்வதால் மலக்குடல் பகுதியில் இரத்தம் தேங்கி, நரம்புகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இது கடுமையான வலி, அரிப்பு மற்றும் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும்.

தீர்வு

5 நிமிட விதி: ஆரோக்கியத்திற்கான தீர்வு

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 37% பேர் கழிவறையில் 5 நிமிடங்களுக்கும் மேலாகச் செலவிடுகின்றனர். ஆனால், போன் பயன்படுத்தாதவர்களில் வெறும் 7% பேர் மட்டுமே இவ்வளவு நேரம் அமருகின்றனர். கழிவறையில் அமர்ந்த 5 நிமிடங்களுக்குள் கழிவுகளை வெளியேற்றிவிட்டு எழுந்துவிட வேண்டும். இது உங்கள் இடுப்புத் தசைப் பகுதியை முறையாகப் பயிற்சி கொடுத்து, தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, டிஜிட்டல் சாதனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. கழிவறையில் போன் பார்ப்பது ஒரு மன அழுத்த நிவாரணியாகத் தோன்றினாலும், அது உண்மையில் நோமோஃபோபியா எனும் போன் இல்லாமல் இருப்பதற்கு பயம் மற்றும் தூக்கமின்மை போன்ற உளவியல் சிக்கல்களின் அறிகுறியாகும்.

Advertisement

பாதிப்பு

பாதிப்பைக் குறைக்க நடைமுறை வழிகள்

மூல நோய் வராமல் தடுக்கவும், அதன் வலியிலிருந்து தப்பிக்கவும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: போனைத் தவிர்க்கவும்: கழிவறைக்குள் செல்போன் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கவும். இது கதிரியக்கத் தாக்கம் மற்றும் பாக்டீரியா தொற்றிலிருந்தும் உங்களைக் காக்கும். நார்ச்சத்து உணவு: சமச்சீரான உணவு, அதிகப்படியான தண்ணீர் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் மலசிக்கலைத் தவிர்க்க உதவும். உடல் உழைப்பு: ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறையை மாற்றி, தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மனநிலை மாற்றம்: கழிவறையில் நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் போன் இல்லாமலேயே அந்த நேரத்தை அமைதியானதாக மாற்றலாம்.

Advertisement