இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது
பாகுபாடுகள் ஒழிப்பு தினம் என்பது உலகளாவிய உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இதை முதலில், 2014-இல், UNAIDS இயக்குனர் மைக்கேல் சிடிபே வலியுறுத்தினார். பாகுபாடு குறித்து தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சமூகங்கள் மீதான அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். இனம், பாலினம், வயது, மதம், இயலாமை மற்றும் பிற காரணிகளின் அடிப்படையிலான பாகுபாடு, மனித உரிமைகளை மீறும் செயல் மற்றும் சமத்துவமின்மையை குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் ஒரு கருப்பொருளுடன் அனுசரிக்கப்படும்.
சமூக பாகுபாடை களைவோம்
UNAIDS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், "இந்த ஆண்டின், பாகுபாடுகள் ஒழிப்பு தினத்தில், 'உயிர்களைக் காப்பாற்றுங்கள்: குற்றங்களை நீக்குதல்' என்ற கருப்பொருளின் கீழ், UNAIDS, குறிப்பிட்ட சமூக மக்கள் மீதும் மற்றும் எச்.ஐ.வி உடன் வாழும் மக்களின் மீதும், பாகுபாடை களைவதும், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதும் நமது கடமை" எனக்குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில், "உலகம் பல முன்னேற்றங்களை கண்டாலும், இலக்கை அடைவதில் நாம் இன்னும் வெகு தொலைவில் உள்ளோம்" என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றும், 134 நாடுகள் எச்.ஐ.வி பாதிப்பை, வெளிப்படுத்துதல் அல்லது பரவுதல் போன்றவற்றை குற்றமாக கருதுகின்றன; 20 நாடுகள் திருநங்கைகளை தண்டிக்கின்றன ; 153 நாடுகள் பாலியல் தொழில தடைசெய்கிறது; UNAIDS-இன் படி, 67 நாடுகள். தன்பாலின பாலியல் செயல்பாடுகளை குற்றமாக்குகின்றன.