இன்று Bipolar Disorder தினம்; இந்த மனநோயின் அறிகுறிகளையும், அதன் தீர்வுகளையும் பற்றி தெரிந்து கொள்க
Bipolar Disorder என்பது ஒரு வகை மனநிலை பாதிப்பு. இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், இரு தீவிர மனநிலை மாற்றங்களை எதிர்கொள்வார்கள். அதீத உணர்ச்சிநிலை மற்றும் மனசோர்வு இரண்டும் ஏற்படும். இந்த நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான், இந்நாளை அனுசரிக்கின்றனர். மேலை நாடுகளின் கலை உலகில் மிகவும் பிரபலமானவர், வின்சென்ட் வான் கோவ். அவரும் இவ்வகை மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் நினைவாக, அவரின் பிறந்தநாளை, பைபோலார் டிஸ்ஆர்டர் தினமாக அனுசரிக்கின்றனர். 1999-ஆம் ஆண்டில், சர்வதேச இருமுனைக் கோளாறுகளுக்கான சர்வதேச சங்கம் (ISBD), சர்வதேச இருமுனைக் கோளாறுகள் (IBPF) மற்றும் ஆசிய நெட்வொர்க் ஆஃப் பைபோலார் டிஸார்டர்ஸ் (ANBD) ஆகியவற்றுடன் இணைந்து, உலகம் முழுவதும், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த நோயின் அறிகுறிகளும், மருத்துவ தீர்வுகளும்
இவ்வகை மனநல கோளாறில், ஒரு நபரின் மனநிலையானது, உச்சநிலை (பித்து) மற்றும் தாழ்வுநிலை (மனச்சோர்வு) ஆகியவற்றுக்கு இடையில் மாறி மாறி ஊசலாடும் ஒரு மனநலக் கோளாறு (மூட் ஸ்விங்). நோயாளிகள், மனச்சோர்வடைந்தால், நீங்கள் சோகமாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ உணரலாம். அதனால், ஆர்வமின்மை மற்றும் மகிழிச்சியற்ற நிலை உருவாகும். அதே சமயம், நீங்கள் மகிழ்ச்சியாக, ஆற்றல் நிறைந்தவராகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக அதீத எரிச்சலையும், கோபத்தையும் உணரலாம். இந்த இருவேறு மனநிலை மாற்றங்கள், உங்களின் தூக்கம், ஆற்றல், செயல்பாடு, நடத்தை மற்றும் தெளிவாக சிந்திக்கும் திறனை பாதிக்கலாம். இந்த மனநல பாதிப்பை கண்டறிய, 10 -15 ஆண்டுகள் வரை ஆகலாம். Bipolar disorder, மருந்துகள் மற்றும் உளவியல் ஆலோசனை (உளவியல் சிகிச்சை) மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.