புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள்
செய்தி முன்னோட்டம்
புதிய டாட்டூ போட்டுக்கொள்வதை விட, அதை பராமரிப்பதில் கவனம் தேவை. ஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால் அது வடுக்களாகவும், தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்பாகியும் விடும்.
நீங்கள் டாட்டூ இடும் முன்னர், உங்கள் டாட்டூ ஆர்ட்டிஸ்ட், அங்கீகரிக்கப்பட்டவரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும், அதன் பின்னர் அவர் டாட்டூ இடுவதற்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்றும் உறுதி செய்து கொள்ளவும்.
அதன் பின்னர், நீங்கள் செய்ய வேண்டிய பராமரிப்பு குறிப்புக்கள் இதோ:
டாட்டூ குத்தப்பட்ட பிறகு, உங்கள் டாட்டூ கலைஞர், அந்த இடத்தை சுத்தம் செய்து, ஆண்டிபயாடிக் க்ரீமை இடுவார். அதன் மேல், துணியோ, பிளாஸ்டிக் உரையோ பயன்படுத்தி மூடுவார்கள். அதை நீங்கள் குறைந்தபட்சம் 2- 3 மணிநேரமாவது வைத்திருப்பது அவசியம்.
டாட்டூ
டாட்டூவை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும்
அதன் பின்னர், உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்து விட்டு, வெதுவெதுப்பான நீரை கொண்டு, டாட்டூ இடப்பட்ட இடத்தில மெதுவாக தடவி, கட்டுகளை அகற்றவும்.
பின்னர், வெதுவெதுப்பான நீரில், டாட்டூ போடப்பட்ட இடத்தை கழுவி, பாக்டீரியா எதிர்ப்பு அல்லது ஆண்டிமைக்ரோபியல் சோப்பை கொண்டு சுத்தப்படுத்தவும். அதற்க்கு உங்கள் விரல்களையே பயன்படுத்துங்கள். லூஃபா, ஸ்பாஞ் அல்லது துணியை பயன்படுத்தாதீர்கள்.
சுத்தம் செய்தபிறகு, சிறிது நேரம் காற்றில் உலர விடவும். பிறகு, உங்கள் டாட்டூ ஆர்ட்டிஸ்ட் பரிந்துரைத்தபடி மாய்ஸ்சரைசிங் க்ரீமை தடவுங்கள்.
உங்கள் டாட்டூவை ஒரு நாளைக்கு குறைந்தது 2,3 முறை வெதுவெதுப்பான நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன் சுத்தம் செய்யவும்.
குறைந்தது 2 -3 வாரங்களுக்கு டாட்டூவை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும்