Page Loader
'கோபி மஞ்சூரியனை' தடை செய்த இந்திய நகரம்: காரணம் என்ன தெரியுமா?

'கோபி மஞ்சூரியனை' தடை செய்த இந்திய நகரம்: காரணம் என்ன தெரியுமா?

எழுதியவர் Sindhuja SM
Feb 05, 2024
04:49 pm

செய்தி முன்னோட்டம்

காலிபிளவரால் செய்யப்படும் 'கோபி மஞ்சூரியன்' என்ற பிரபல சிற்றுண்டியை கோவாவில் உள்ள மாபுசா நகரம் தடை செய்துள்ளது. அதில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் காரணமாக அது தடை செய்யப்பட்டுள்ளது. கோவாவில் இருக்கும் ஒரு நகரம் கோபி மஞ்சூரியனை தடை செய்வது இது முதல் முறையல்ல. 2022 ஆம் ஆண்டில், ஸ்ரீ தாமோதர் கோவிலில் நடந்த வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது, ​​உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(FDA) மோர்முகாவ் முனிசிபல் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் கோபி மஞ்சூரியன் விற்கும் ஸ்டால்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கியது.

கோவா

'கோபி மஞ்சூரியன்' உருவான கதை 

'கோபி மஞ்சூரியன்' என்பது இந்திய-சீன உணவு முறைகளை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பியூசன் உணவாகும். 'கோபி மஞ்சூரியன்' சிக்கன் மஞ்சூரியனை முன்னோடியாக வைத்து செய்யப்பட்ட ஒரு சிற்றுண்டியாகும். மும்பையின் சீன சமையல் முன்னோடியான நெல்சன் வாங், 1970 களில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் உணவு பரிமாறும் போது முதன் முதலில் சிக்கன் மஞ்சூரியனை செய்து வழங்கினார். புதுமையான ஒன்றை உருவாக்க முயன்ற நெல்சன் வாங், காரமான கார்ன்ஃப்ளார் மாவில் சிக்கன் நகெட்களை ஆழமாக வறுத்து, அதில் சோயா சாஸ், வினிகர், சர்க்கரை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து ஒரு கசப்பான கிரேவியாக அதை உருவாக்கினார். அதன் பிறகு வந்த காலகட்டங்களில் சைவ பிரியர்களுக்காக 'கோபி மஞ்சூரியன்' கண்டுபிடிக்கப்பட்டது.