வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம்
தமிழ்நாட்டில், திருமண நாளின் போது, வாழை மரத்திற்கு தாலி கட்டுவதில் தொடங்கி, தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம் செய்தால் மழை வரும் என்பது வரை, பல வினோத மூட நம்பிக்கைகள் இன்றும் நிலவுகிறது. அதே போல, நாடெங்கும் பல மூட பழக்கங்கள், இன்றும் பரவலாக இருக்கிறது. அவற்றில் ஒன்று தான், சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள பிப்பரியா கிராமத்தில் நடந்தது. கிளிக்கும் மைனாவிற்கும் திருமணம் நடைபெற்றது! இந்த இரு பறவைகளையும் வளர்த்தவர்கள், அவர்களின் 'ஜாதக பொருத்தத்தை' பார்த்து, மாப்பிளை ஊர்வலத்துடன், இந்த வித்தியாசமான திருமணத்தை நடத்தியுள்ளனர். ஜானவாச ஊர்வலத்திற்கு, சிறிய நான்கு சக்கர வாகனத்தில், கிளிக்கூண்டு கொண்டு வரப்பட்டது. இந்த வினோத திருமணத்தை, அந்த ஊர் மக்கள் அனைவரும் நேரில் கண்டு ரசித்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.