Page Loader
வந்தே பாரத் ரயிலில் பாடியபடி பயணம் செய்த பெண்கள்; வைரலாகும் காணொளி
அந்த வீடியோ வைரலான நேரத்திலேயே, பலரும் அந்த பெண்களை கண்டித்தும் வருகின்றனர்

வந்தே பாரத் ரயிலில் பாடியபடி பயணம் செய்த பெண்கள்; வைரலாகும் காணொளி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2024
05:31 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் இருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில், ஒரு இளம் வயது பெண்கள் குழு, பாடல்களை பாடியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ வைரலான நேரத்திலேயே, பலரும் அந்த பெண்களை கண்டித்தும் வருகின்றனர். இந்த காணொளியை தெற்கு ரயில்வே, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவேற்றியிருந்தது. அதை பார்த்த பயனர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் சுமார் 12 பெண்கள் கோரஸாக பாடல்களை பாடி வருகின்றனர். தென்னக ரயில்வே இந்த தருணத்தை "ரம்யமானது" என்று விவரித்தாலும், சமூக ஊடக பயனர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக இது "பப்ளிக் நியூசன்ஸ்" என்று கூறி வருகின்றனர். அதோடு, வீடியோவை விளம்பரப்படுத்தியதற்காகவும் தெற்கு ரயில்வேவை சாடி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வந்தே பாரத் ரயில்

ட்விட்டர் அஞ்சல்

வந்தே பாரத் ரயில்