மகளிர் தினத்திற்கு என்ன ஸ்டேட்டஸ் வைக்கலாம் என குழப்பமா? சில ஐடியாஸ்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
பெண்களின் சாதனைகள், அர்ப்பணிப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய அசாதாரணமான சக்தியையும் நினைவுபடுத்தும் முக்கியமான நாளாக இந்த நாள் மாறியுள்ளது.
இது பாலின சமத்துவம், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான சமமான உலகின் முக்கியத்துவத்தைப் பதிவு செய்யும் விழாவாகும்.
இந்த நாளில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்டிரை வாழ்த்துவதற்கு ஸ்டேட்டஸ் என்ன வைக்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக சில ஐடியாக்கள் இதோ!
ஐடியாக்கள்
ஸ்டேட்டஸ் ஐடியாக்கள்
உங்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத பெண்களை கொண்டாட நீங்களே ஓரிரு வாக்கியங்கள் எழுதி உங்கள் நன்றியை பதிவிடலாம்.
அதோடு அவர்களுடன் நீங்கள் இருந்த சந்தோஷமான தருணங்களை எல்லாம் புகைப்பட வீடியோ போல மாற்றி அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லலாம்.
அவர்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் கூறலாம்.
இது தவிர இணையத்தில் பல வகையான வாழ்த்து போஸ்டர்களும், வாழ்த்துக்களும் இடப்பெற்றிருக்கும்.
அதில் உங்களுக்கு பிடித்தவற்றையும், பெண்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேர்வு செய்து ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
வாழ்த்து
சில வாழ்த்து ஸ்டேட்டஸ்
வாழ்க்கை ஒரு வானவில் என்றால், பெண்கள் அதன் நிறங்கள். எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!
பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும், உருக்கவும் தெரியும்!அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம் தான் பெண்கள்..
பெண்ணே நீ!!! கலங்குவதற்காக பிறக்கவில்லை!!! கதிரவன்போல் ஒளிவீசுவதற்காக பிறந்துள்ளாய்!!! மற்றவர்கள் நிழலில், நீ வாழ பிறக்கவில்லை!!! உன் நிழலில் மற்றவர்கள் வாழ பிறந்துள்ளாய்!!! ஓர் ஆணுக்கு பின்னால் பெண் என்பதற்காகவா நீ பிறந்துள்ளாய்? இல்லை.. ஓர் ஆணுக்கு நிகரானவள் தான் பெண் என்பதற்காக பிறந்துள்ளாய் என நினைவில் கொள்..
பெண்களில் இல்லாத உலகில் அன்பு நிலைத்திருப்பதில்லை.. அன்பு இல்லாத உலகில் மனிதன் வாழ்ந்திருப்பதில்லை..
மேற்கோள்கள்
பிரபலங்களின் மகளிர் தின மேற்கோள்கள்
"ஒரு பெண் முழு வட்டத்தில் இருக்கிறாள். அவளுக்குள் படைக்கவும், வளர்க்கவும், மாற்றவும் சக்தி இருக்கிறது." — டயான் மேரிசைல்ட்
"எந்தவொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய சிறந்த பாதுகாப்பு தைரியம்." — எலிசபெத் கேடி ஸ்டாண்டன்
"பெண்களாகிய நாம் சாதிக்கக்கூடியதற்கு வரம்பு இல்லை." — மிஷேல் ஒபாமா
"ஒவ்வொரு பெண்ணின் வெற்றியும் இன்னொருவருக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்போது நாம் வலிமையானவர்கள்." — செரீனா வில்லியம்ஸ்.
"அவள் தன்னால் முடியும் என்று நம்பினாள், அதனால் அவள் அதைச் செய்தாள்." — ஆர்.எஸ். கிரே.
"பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சிறந்த வழி அவர்களுக்கு கல்வி அளிப்பதாகும்." - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
"பெண்கள்தான் சமூகத்தின் உண்மையான சிற்பிகள்." - சுவாமி விவேகானந்தர்