காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.
சினிமா ஷூட்டிங்கிற்கும் பிரபலமான தேர்வாகவே இந்த நகரம் உள்ளது. வெண்பனி போர்த்திய மலைகள், அழகிய ஏரிகள், பசுமையான பூங்காக்கள், இதோடு கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளுமையான ஒரு இடத்திற்கு சுற்றுலா போக வேண்டும் என்றால், உங்கள் தேர்வு காஷ்மீர் தான்.
சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து என வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல பட்ஜெட் இல்லாதவர்களுக்கு, காஷ்மீர் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
ஸ்ரீநகர், குல்மார்க் என பல பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கள் இருப்பினும், அதிகம் பரிச்சயம் இல்லாத, மற்ற சுற்றுலா இடங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு.
card 2
காஷ்மீரில் அமைந்துள்ள அழகிய கிராம பகுதிகள், சிறந்த சுற்றுலா தளங்களாகும்
சட்பால்: ஸ்ரீநகரில் இருந்து 90 கிமீ அமைந்துள்ள இந்த கிராமம், ஆறுகள், பனிமலைகள் சூழ்ந்த சொர்கபுரியாகும். இந்த கிராமத்தில் நீங்கள், மலையேற்றம் செய்யவும் அனுமதி உண்டு. அதோடு அங்கிருக்கும் ஆப்பிள் தோட்டங்களுக்கு விசிட் அடிக்கலாம்.
வாட்லாப்: இந்த மலைகிராமம், அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளுக்கும் நடுவில் உள்ளது. அந்த கிராமத்தில் தான் பிரபலமான வுலர் ஏரி உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களும், மசூதிகளும் உள்ளது.
வெரினாக்: ஜீலம் நதியின் பிறப்பிடமாகக் கருதப்படும் வெரினாக், நீரூற்றுக்கும் பெயர் பெற்றது. பேரரசர் ஜஹாங்கீர் காலத்தில் கட்டப்பட்ட முகலாய தோட்டங்களில் பார்வையாளர்கள் நேரத்தை செலவிடலாம். இந்த நகரம் அதன் குங்குமப்பூ வயல்களுக்காகவும் புகழ்பெற்றது.