LOADING...
நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்; மருத்துவர்கள் எச்சரிக்கை
நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்அதிகரிக்கலாம் என எச்சரிக்காகி

நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்; மருத்துவர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 13, 2025
06:24 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, குறைந்த இடைவெளி ஓய்வுகள் மற்றும் குறைந்த உடற்பயிற்சி பழக்கம் ஆகியவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது வீனஸ் த்ராம்போஎம்பொலிசம் (Venous Thromboembolism - VTE) எனப்படும் உயிருக்கு ஆபத்தான ரத்தக் கட்டி நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் டீப் வீன் த்ராம்போசிஸ் (DVT) மற்றும் பல்மனரி எம்பொலிசம் (PE) எனும் இரண்டு முக்கிய பிரிவுகள் அடங்கும். ரத்தக் கட்டி உருவாகும்போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. பொதுவாக இது கால்களில் தோன்றுகிறது. ஆனால் கட்டி நுரையீரலுக்குச் சென்றால் அது உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம்.

இரத்தக் கட்டி

இரத்தக் கட்டி உருவாகும் சூழ்நிலை

நீண்ட நேரம் அசைவின்றி அமர்ந்து இருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து, ரத்தம் நின்று விடும் நிலையையும், அதனால் இரத்தக் கட்டி உருவாகும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது. அதிக எடை, நீர்ச்சத்து குறைவு, புகைபிடித்தல், சமீபத்திய அறுவை சிகிச்சை மற்றும் மரபணு காரணிகள் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாக ஒரு காலில் வீக்கம், வலி, சிவப்பு, திடீர் மார்வலி, மூச்சுத்திணறல் அல்லது இதய துடிப்பு அதிகரிப்பு ஆகியவை தோன்றலாம். இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

தவிர்த்தல்

எப்படி தவிர்ப்பது?

தவிர்க்கும் வழிமுறைகளில் ஒவ்வொரு 30-45 நிமிடத்திற்கும் எழுந்து நின்று அசைவது, தண்ணீர் குடிப்பது, எளிய டெஸ்க் பயிற்சிகள் (கால்களை சுற்றி அசைப்பது, குதிகால்களை உயர்த்துவது) ஆகியவை முக்கியம். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது அல்லது நீச்சல் போவது போன்ற உடற்பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நீண்ட விமானப் பயணங்களிலும் வாகனப் பயணங்களிலும் கால்களை அடிக்கடி அசைத்து, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும். மருத்துவர்கள் கூறுவதுபோல், அமர்ந்து இருப்பதே பிரச்சனை அல்ல, அசையாமல் இருப்பதுதான் ஆபத்து. சிறிதளவு அசைவும் தினமும் ரத்தக் கட்டி அபாயத்தை பெருமளவில் குறைக்க முடியும்.