ஆன்டிபயாடிக் மாத்திரைகளை நீங்களாகவே சாப்பிடுகிறீர்களா? உங்கள் குடலில் 9 வருடம் தங்கும் ஆபத்து; ஆய்வில் வெளியான பகீர் உண்மை
செய்தி முன்னோட்டம்
நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்பான ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், சுமார் 15,000 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒருமுறை ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களின் குடல் நுண்உயிரிகள், 4 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகும் கணிசமாக மாறியிருப்பது கண்டறியப்பட்டது. நமது குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகள் தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும்போது, தவறுதலாக இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று ஆன்டிபயாடிக் வகைகள்: கிளிண்டாமைசின் புளோரோகுயினொலோன்கள் புளூக்ளோக்சசிலின்
பாதிப்புகள்
நீண்ட கால பாதிப்புகள் என்ன?
ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்வதன் காரணமாக, உணவைச் செரிமானம் செய்து ஆற்றலாக மாற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைகிறது. இது பிற்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் தற்காப்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும். ஆன்டிபயாடிக் எடுத்துக்கொண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும் குடல் ஆரோக்கியம் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்புவதில்லை.
குடல் ஆரோக்கியம்
குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 5 வழிகள்
எக்காரணம் கொண்டும் நீங்களாகவே மருந்துக் கடைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். தயிர், மோர் போன்ற நொதித்தல் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வளர்க்க உதவும். வழக்கமான உடற்பயிற்சி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நச்சுக்களை வெளியேற்ற உதவும்.