Loading...
மின்சாரக் கட்டணம் எகிறாம தடுக்க இது ஒன்னு போதும்! ஃபிரிட்ஜ் கதவில் ஒரு பேப்பர் வச்சு பாருங்க
ஃபிரிட்ஜ் கூலிங் குறையாம தடுக்க உதவும் எளிய 'பேப்பர் டெஸ்ட்' சோதனை

மின்சாரக் கட்டணம் எகிறாம தடுக்க இது ஒன்னு போதும்! ஃபிரிட்ஜ் கதவில் ஒரு பேப்பர் வச்சு பாருங்க

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
04:19 pm

செய்தி முன்னோட்டம்

வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் திடீரென சத்தமாக இயங்குவது, ஃப்ரீசரில் அதிகளவில் பனிப்பாறை போல் ஐஸ் கட்டிகள் உறைவது அல்லது வழக்கத்திற்கு மாறாக மின்சாரக் கட்டணம் உயருவது போன்ற பிரச்சனைகள் வரும்போது தான் பலரும் ஃபிரிட்ஜ் கதவில் உள்ள ரப்பர் கேஸ்கெட்டைப் பற்றி யோசிப்பார்கள். ஃபிரிட்ஜின் உட்புறக் குளிர்ந்த காற்று வெளியேறாமலும், வெளிப்புறக் சூடான காற்று உள்ளே நுழையாமலும் தடுப்பதே இந்த ரப்பர் கேஸ்கெட்டின் முக்கிய வேலையாகும். ஆனால் பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு இந்த ரப்பர் தளர்வடைந்து, கண்ணுக்குத் தெரியாத சிறிய இடைவெளிகள் மூலம் கூலிங்கை வெளியேற்றத் தொடங்கிவிடும்.

பேப்பர் டெஸ்ட்

கூலிங் கசிவைக் கண்டறியும் எளிய 'பேப்பர் டெஸ்ட்' முறை

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் கதவின் ரப்பர் கேஸ்கெட் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய எந்தவொரு மெக்கானிக் அல்லது உபகரணங்களும் தேவையில்லை.

சாதாரண ஒரு ஏ4 தாள் அல்லது காகிதத்தைக் கொண்டு ஒரே நிமிடத்தில் சோதித்துவிடலாம்.

முதலில் ஒரு பேப்பரை எடுத்து ஃபிரிட்ஜ் கதவைத் திறந்து, அதன் பாதியை உட்புறமும் மீதியை வெளிப்புறமும் தொங்குமாறு வைத்து கதவை மூடுங்கள்.

இப்போது கதவைத் திறக்காமல் அந்தப் பேப்பரை வெளியே இழுக்க முயற்சிக்க வேண்டும்.

ஃபிரிட்ஜின் மேல் பகுதி, நடுப்பகுதி, கீழ் பகுதி மற்றும் மூலைகள் என அனைத்து இடங்களிலும் இதேபோல் செய்ய வேண்டும்.

முடிவுகள்

பேப்பர் டெஸ்ட் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் என்ன?

பேப்பரை இழுக்கும்போது அது பலமான பிடிப்புடன் லேசாகக் கிழிந்து வருவது போல் இருந்தால், உங்கள் ஃபிரிட்ஜ் கேஸ்கெட் நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

மாறாக, கதவு மூடியிருக்கும் போதே பேப்பர் எவ்வித எதிர்ப்பும் இன்றி மிக எளிதாக வெளியே வழுக்கிக் கொண்டு வந்தால், கதவின் அந்தப் பகுதியில் காற்று கசிகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு காற்று கசியும்போது, அமைக்கப்பட்ட வெப்பநிலையைப் பராமரிக்க ஃபிரிட்ஜின் கம்ப்ரஸர் தொடர்ந்து நீண்ட நேரம் இயங்க வேண்டியிருக்கும்.

இதனால் மின்சாரக் கட்டணம் உயர்வதோடு, உணவுகளும் சீக்கிரமே பாழாகிவிடும்.

ADVERTISEMENT

சரி செய்வதற்கான வழிகள்

பழுதடைந்த ரப்பர் கேஸ்கெட்டை சரிசெய்யும் எளிய வழிகள்

கேஸ்கெட்டை மாற்ற முடிவெடுப்பதற்கு முன், ஒரு கதகதப்பான ஈரமான துணியை வைத்து ரப்பர் கேஸ்கெட்டில் உள்ள அழுக்கு மற்றும் உணவுப் பிசுக்குகளைத் துடைக்க வேண்டும்.

ஏனெனில் அழுக்குகள் படிந்திருந்தாலும் ரப்பரின் பிடிப்புத் தன்மை குறைய வாய்ப்புள்ளது.

சுத்தம் செய்த பிறகும் பேப்பர் டெஸ்ட்டில் தோல்வியடைந்தால், கேஸ்கெட்டின் நெகிழ்வுத்தன்மை முற்றிலுமாக போய்விட்டது என்பதால் புதிய கேஸ்கெட்டை மாற்ற வேண்டும்.

சந்தையில் எளிதாகக் கிடைக்கும் இந்த ரப்பர் கேஸ்கெட்களை, மெக்கானிக் உதவி இன்றியே ஃபிரிட்ஜ் கதவின் விளிம்பில் நாமே எளிதாகப் பொறுத்திவிட முடியும்.

ADVERTISEMENT

மிச்சப்படுத்தல் வழிமுறைகள்

முறையான பராமரிப்பால் பணத்தை மிச்சப்படுத்தும் வழிமுறைகள்

ஃபிரிட்ஜில் கூலிங் பிரச்சனை பெரிய அளவாகி மின்சாரக் கட்டணம் எகிறும் முன்பும், காய்கறிகள் வீணாகும் முன்பும் அதைக் கண்டறிய இந்த பேப்பர் டெஸ்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எந்த செலவும் இன்றி வெறும் ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய இந்தச் சோதனையை, 4 அல்லது 5 வருடங்களுக்கு மேற்பட்ட பழைய ஃபிரிட்ஜ்களுக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

கம்ப்ரஸர் அதிக நேரம் இயங்கி மின்கட்டணத்தை கூட்டுவதற்கு முன்பாக, பழுதடைந்த கேஸ்கெட்டை முன்கூட்டியே மாற்றுவது மிகப்பெரிய பண விரையத்தைத் தடுக்கும் சிறந்த பராமரிப்பு முறையாகும்.

ADVERTISEMENT