LOADING...
டீயுடன் சாப்பிட சுவையான ஸ்கோன், எளிமையான செய்முறை இங்கே!
வீட்டிலேயே சுவையான ஸ்கோன் செய்வதற்கான எளிய வழிகள்

டீயுடன் சாப்பிட சுவையான ஸ்கோன், எளிமையான செய்முறை இங்கே!

எழுதியவர் Vasuki
May 24, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற 'ஸ்கோன்' (Scone) என்னும் பேக்கிங் உணவு, இப்பொழுது உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இது பார்ப்பதற்கு நம் ஊர் பிஸ்கட் அல்லது பன் (Bun) போல இருக்கும் ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இதனைப் பொதுவாகப் பால், தேநீர் (Tea) அல்லது காபியுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஸ்கோன் செய்வதற்குப் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், இங்கு உங்கள் வீட்டிலேயே மிக எளிதாகச் செய்யக்கூடிய ஒரு எளிய செய்முறையை நாம் பார்க்கப் போகிறோம். வாருங்கள், சுவையான ஸ்கோன் எப்படிச் செய்வது என்று இப்போது தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

ஸ்கோன் செய்ய தேவையான பொருட்கள்

1) ஒன்றரை கப் மைதா மாவு 2) அரை கப் வெண்ணெய் 3) கால் கப் சர்க்கரை 4) கால் டீஸ்பூன் உப்பு 5) இரண்டு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் 6) கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா 7) கால் கப் பால் 8) ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எஸ் சென்ஸ் 9) தேவைக்கேற்ப உலர் பழங்கள் அல்லது சாக்லேட் சிப்ஸ். குறிப்பு: இந்த அளவுகளில் உங்களுடைய சுவைக்கேற்ப சிறிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். உதாரணமாக, உங்களுக்கு இனிப்பு அதிகமாகத் தேவைப்பட்டால் சர்க்கரையின் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். அதேபோல், உலர் பழங்களுக்குப் பதிலாகச் சாக்லேட் சிப்ஸ்களையும் (Chocolate chips) பயன்படுத்தலாம்.

படி-1

ஸ்கோன் மாவு பிசையத் தொடங்கலாம்

முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் (Bowl) மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தூவி நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த உலர் கலவையுடன் குளிர்ந்த வெண்ணெயை சேர்த்து, உங்களது கைகளால் மாவை நன்றாக உதிர்த்து விட்டு பிசைய வேண்டும். அடுத்ததாக, இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து மாவை மென்மையாகப் பிசைந்து கொள்ளுங்கள். ஒருவேளை மாவு கைகளில் ஒட்டுவது போல் இருந்தால், சிறிதளவு மைதா மாவை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். மாவை சப்பாத்தி மாவு போல ரொம்ப நேரம் அழுத்திப் பிசையகூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், ஸ்கோன் மிருதுவாக இல்லாமல் மிகவும் கடினமாக மாறிவிடும்.

Advertisement

படி-2

ஸ்கோனுக்கு வடிவம் கொடுக்கலாம்

இப்பொழுது, இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு தட்டையான பலகையில் வைத்து, கைகளால் மெதுவாகத் தட்டிச் சற்றுத் தடிமனான (Thick) வட்ட வடிவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு, ஒரு குக்கீ கட்டர் (Cookie Cutter) அல்லது கத்தியைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த வடிவில் (வட்டமாகவோ அல்லது முக்கோண வடிவிலோ) துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க, கைகளிலும் பலகையிலும் லேசாக மைதா மாவைத் தொட்டுக் கொள்ளலாம். மாவின் நடுப்பகுதியில் லேசாக அழுத்தி விட வேண்டும்; அப்பொழுதுதான் உள்ளே இருக்கும் காற்று வெளியேறி, ஸ்கோன் நன்றாக வெந்து உப்பி வரும். இதே முறையில் அனைத்து மாவையும் உங்களுக்குப் பிடித்த வடிவிற்கு மாற்றித் தயார் செய்து கொள்ளுங்கள்.

Advertisement

படி-3

ஸ்கோன் பேக் பண்ணலாம்

முதலில் ஒரு பேக்கிங் தட்டில் பார்ச்மென்ட் காகிதத்தை விரித்து, அதன் மேல் நாம் வடிவம் செய்து வைத்துள்ள ஸ்கோன் துண்டுகளைச் சற்று இடைவெளி விட்டு அடுக்குங்கள். ஓவனை 180°C வெப்பநிலையில் முன்கூட்டியே சூடுபடுத்தி, பின்னர் ஸ்கோன் உள்ள பேக்கிங் தட்டை உள்ளே வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாகப் பேக் செய்ய வேண்டும். ஸ்கோன்களின் மேற்பகுதி நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியதும், அவற்றை ஓவனில் இருந்து வெளியே எடுத்துச் சிறிது நேரம் ஆற விடுங்கள். நன்றாக ஆறிய பிறகு, இந்தச் சுவையான ஸ்கோன்களை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தலாம். உங்களுக்கு எப்பொழுது தேநீருடன் சாப்பிடத் தோன்றுகிறதோ, அப்பொழுது எடுத்துச் சுவைத்து மகிழலாம்.

பரிமாறும் முறை

ஸ்கோனை இப்படிப் பரிமாறலாம்

ஸ்கோன் நன்றாக ஆறிய பிறகு, அதனைச் சூடான தேநீருடனோ (Tea) அல்லது காபியுடனோ (Coffee) சேர்த்துச் சுவைக்கலாம். உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து 'டீ பார்ட்டி' (Tea Party) ஏதேனும் ஏற்பாடு செய்தால், அங்கு இதனை முதன்மைப் பலகாரமாகப் பரிமாறலாம். இது காலை நேர உணவாகவோ அல்லது மாலை நேரத்திற்கான ஒரு எளிய தின்பண்டமாகவோ (Snacks) சாப்பிடுவதற்கு மிகவும் பிரமாதமாக இருக்கும். அதுமட்டுமன்றி, விசேஷமான நிகழ்வுகள் அல்லது பண்டிகைக் காலங்களில், உங்களது அன்பிற்குரியவர்களுக்கு இதனை நீங்களே கையால் தயாரித்த ஒரு சிறந்த பரிசாகவும் (Gift) கொடுத்து மகிழலாம். வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த பிரிட்டன் பலகாரம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உங்களது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக மிகவும் பிடிக்கும்!

Advertisement