LOADING...
பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள் 
பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள் 

எழுதியவர் Nivetha P
Jul 21, 2023
06:56 pm

செய்தி முன்னோட்டம்

பால் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுவதாகும். பிற உணவுகளை சாப்பிடாத நேரங்களில், சிறிது பாலாவது குடிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக நடைமுறையில் இருந்து வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலில் கலப்படம் செய்யப்படும் பட்சத்தில், அதிலுள்ள கலப்படங்களை கண்டறிவதற்கான சில வழிமுறைகளை தான், இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் விட்டு பாருங்கள், பால் நீல நிறத்திற்கு மாறினால், அதில் மாவுப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். வழுவழுப்பான இடத்தில் மாவு கலக்கப்பட்ட பாலினை ஒரு சொட்டு விட்டால், அது மாவு கனத்தால் தரையில் ஓடும் என்றும் கூறப்படுகிறது.

பால்

பாலில் சோப்பு தூள் போன்ற அசுத்த பொருட்கள் கலப்படம் 

ஒரு பாட்டிலில், சம அளவில் தண்ணீர் மற்றும் பாலினை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த பாட்டிலை நன்றாக குலுக்கினால் அதில் நுரை உண்டாகும். அதிகளவு நுரை காணப்பட்டால் அந்த பாலில் சோப்பு கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் என்கிறார்கள்.சுத்தமான பாலினை குலுக்கினாலும் நுரை வரும், ஆனால் அது சிறிய அளவில் தான் இருக்கும். இதனை தொடர்ந்து, அசுத்தம் கலந்த பாலினை நன்றாக கொதிக்கவிட்டால், அது மஞ்சள் நிறத்திற்கு மாறும். அப்படி அது நிறம் மாறினால் அதில் ஏதோ அசுத்தமான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் என்றும் கூறுகிறார்கள்.

கலப்படம் 

பாலில் மாவு பொருட்கள் கலந்துள்ளதா? என்பதை கண்டறிய வழிமுறை இதோ 

அதன்படி, பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் விட்டு பாருங்கள், பால் நீல நிறத்திற்கு மாறினால் அதில் மாவுப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். வழுவழுப்பான இடத்தில் மாவு கலக்கப்பட்ட பாலினை ஒரு சொட்டு விட்டால் அது மாவு கனத்தால் தரையில் ஓடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சுத்தமான பாலில் இரண்டு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாற்றினை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றியவுடன் அந்த பால் திரிந்து போகும். அவ்வாறு திரியாமல் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட பாலாகும். அதே போல் பாலில் ரசாயன பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் மூலம் எளிதாக கண்டறிந்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

பிஎச் காகிதம் 

ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறியும் வழிமுறை 

ஒரு சிறிய பாட்டிலில் பாலினை எடுத்து கொள்ளுங்கள். அதில் இந்த பிஎச் காகிதம் ஒன்றினை போடுங்கள், சிறிது நேரத்திலேயே அந்த பால் பச்சை நிறத்திற்கு மாறினால் அது சுத்தமான தரமான பால் என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதுவே, அந்த பால் வெளிர் மஞ்சள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் உள்ளிட்ட நிறங்களுக்கு மாறினால் அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் ஆகும். இதனையடுத்து பாலில் அதிகளவு நீர் கலந்திருப்பதினை கண்டறிவதற்கான வழிமுறை என்ன என்பதையும் பார்ப்போம். ஒரு பளபளப்பு மிக்க சாய்வான மேற்பரப்பில் இருந்து பாலினை கொஞ்சமாக ஊற்றவும்.

Advertisement

தண்ணீர் கலப்படம் 

தண்ணீர் அளவு குறித்து கண்டறிய பரிசோதனை 

அவ்வாறு ஊற்றுகையில், அந்த பால் மெதுவாக கீழ்நோக்கி பாயும், அதோடு ஒரு வெள்ளை தடத்தினை விட்டு வழிந்து செல்லும். அதுதான் தண்ணீர் அளவு குறைந்த தூய்மையான பால். அதுவே வேகமாக கீழ் நோக்கி பாய்ந்தால் அது அதிகளவு தண்ணீர் கலக்கப்பட்ட பால் என்பதனை தெரிந்துக்கொள்ளலாம். இவ்வாறு பாலின் கலப்படங்களை வீட்டில் இருந்த படியே மிக எளிமையான பரிசோதனைகளை செய்து தெரிந்து கொள்ள அரசாங்கம் சார்பில், ஈட் ரைட் இந்தியா இயக்கம் தனது இணையதளத்தில் 'DART:Rapid Test' என்னும் பிரிவின் கீழ் ஒரு கையேட்டினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement