புரட்டாசி ஸ்பெஷல்: சுவையான வெஜ் ஷவர்மா செய்முறை
தற்போது பலரும் விரும்பும் ஒரு பாஸ்ட் ஃபூட் 'ஷவர்மா'. அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த உணவு, தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. சூடான பீட்டா பிரட்டில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மயோனைஸ் மற்றும் சில பொருட்களை சேர்த்து, ரோல் செய்து தருவதுதான் இந்த ஷவர்மா. ஆனால், இது புரட்டாசி மாதம் என்பதால் பலரும் இந்த சுவையான உணவை சாப்பிடமுடியாமல் யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த ஸ்பெஷல் ரெசிபி. வெஜிடேரியன் ஷவர்மா! இதன் செய்முறை மிகவும் சுலபம். வீட்டிலிருக்கும் பொருட்கள் கொண்டே தயாரிக்கலாம்.
வெஜ் ஷவர்மா செய்ய தேவையான பொருட்கள்:
ஃபலாஃபெலுக்காக (falafel) 1 கப் காபூலி சானா (வெள்ளை கொண்டைக்கடலை) , 8 மணி நேரம் ஊறவைக்கவும் 60 கிராம் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் 1 தேக்கரண்டி மைதா 2 கிராம்பு பூண்டு , நறுக்கியது நறுக்கிய கொத்தமல்லி தழைகள் சிறிதளவு 1 தேக்கரண்டி வறுத்த சீரக தூள் உப்பு, சுவைக்கேற்ப மிளகு தூள், சுவைக்கேற்ப எண்ணெய், தேவைக்கேற்ப பிடாவிற்கு 2 கப் முழு கோதுமை மாவு 1 தேக்கரண்டி ஆக்டிவ் ட்ரை ஈஸ்ட் 1/2 கப் பால் 1 தேக்கரண்டி சர்க்கரை உப்பு , சுவைக்கேற்ப
மற்ற பொருள்கள்
ஊறுகாய் காய்கறிகளுக்கு 1 வெள்ளரிக்காய், நறுக்கியது 1 கேரட், நறுக்கியது 1 தக்காளி ,விதைகள் நீக்கி நறுக்கப்பட்டது 1/4 கப் சில்லி வினிகர் 1 தேக்கரண்டி உப்பு 1 தேக்கரண்டி சர்க்கரை மற்ற மூலப்பொருள்கள் 1 கப் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹம்மஸ் 1 கப் ஜாட்ஸிகி (Tzatziki ) 1 வெங்காயம், நறுக்கியது
வெஜ் ஷவர்மா செய்முறை
பிடாவிற்கு வெஜ் ஷாவர்மா ரெசிபியை உருவாக்க முதலில் ரொட்டியைத் தயாரிப்போம். இதமான சூட்டில் உள்ள பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலக்கவும். அதை ஓரமாக மூடி வைக்கவும் பின்னர் அதனுடன் மாவு, உப்பு, தண்ணீரை சேர்த்து, மிருதுவாக பிசையவும். சுமார் 10 நிமிடங்கள் வரை பிசைந்து, பின்னர் ஈரமான துணியால் மூடி, மாவை ஒரு வெதுவெதுப்பான இடத்தில் மூடி வைக்கவும். ஈஸ்ட் கலந்திருப்பதால், மாவு இரண்டு மடங்கு விரியும். அதனால், ஒரு அகண்ட பாத்திரத்தில் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, அதை சப்பாத்தி போல திரட்டவும். ரொட்டி மிகவும் மெல்லியதாக தேய்க்கக்கூடாது. காய்கறிகள் நடுவே வைத்து ரோல் செய்யவேண்டும் என்பதால், சற்றே பெரிய சப்பாத்தியாக திரட்டிக்கொள்ளவும்.
ஊறுகாய் மற்றும் ஃபலாஃபெல் செய்முறை
ஊறுகாய் ஊறுகாய் காய்கறிகளுக்கு ஒரு கிண்ணத்தில் வெள்ளரி, தக்காளி மற்றும் கேரட், சில்லி வினிகர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, லேசாக கிளறி அதை தனியாக வைக்கவும். ஃபலாஃபெல் ஃபலாஃபெலுக்காக இப்போது ஊறவைத்த கொண்டைக்கடலை ப்ரெஷர் குக்கரில் 3 விசில்கள் வைத்து, பின்னர் 5 நிமிடம் குறைந்த அனலில் வைத்து வேகவைக்கவும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில்,எண்ணெய் தவிர, வேக வைத்த கொண்டைக்கடலை உட்பட மற்ற பொருட்களை சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து, கட்லெட் போல எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
ஷவர்மாவை அசெம்பிள் செய்ய
தயாராக இருக்கும் பிட்டா பிரெட்டை எடுத்து, 2 டேபிள் ஸ்பூன் ஹம்மஸை சமமாகப் பரப்பி, ஒரு டேபிள் ஸ்பூன் ஜாட்ஸிகி சாஸையும் சேர்க்கவும். பின்னர் தயார் செய்த ஊறுகாயிலிருந்து, ஒரு வெள்ளரி, கேரட் மற்றும் தக்காளியை நடுவில் வைக்கவும். அதன் மேலே தயார் செய்த ஃபாலாஃபெல்ஸை வைத்து நறுக்கிய வெங்காயத்தை பரப்பி, பிரெட்டை இறுக்கமாக ரோல் செய்யவும். பட்டர் பேப்பரைப் பயன்படுத்தி, சுருட்டப்பட்ட ஷவர்மாவை அதில் வைத்து, இறுக்கமாக மடக்கி பரிமாறவும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்