
நீங்கள் தாய் உணவு பிரியரா? உங்களுக்காகவே Thai Green Curry செய்முறை
செய்தி முன்னோட்டம்
சமையல் குறிப்பு: தாய் உணவுகளும், சமையலும், பலருக்கும் பிடிப்பதுண்டு.
காய்கறிகள், தேங்காய் பால், இறைச்சி என பலவித காம்பினேஷனில் உணவு பதார்த்தங்கள் கிடைக்கும்.
தற்போது தமிழ்நாட்டிலும் தாய் உணவுகள் பிரபலமடைந்து வருகின்றன.
இன்று அந்த தாய் உணவில் பிரபலமான தாய் க்ரீன் கரி(Thai green curry) செய்வது எப்படி என பாப்போம்.
இதற்கு தேவையான பொருட்கள் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அதுமட்டுமின்றி, தாய் உணவுகளுக்கென தனியாக கடைகளும், ஆன்லைனிலும் கிடைக்கிறது. அதில் வாங்கி ட்ரை செய்து பாருங்கள்.
card 2
தேவையான பொருட்கள்
பச்சை கரி பேஸ்டுக்கு
1 லெமன் க்ராஸ் தண்டு
4 பச்சை மிளகாய் சிறிய வகை
2 காஃபிர் லைம் இலைகள்
1 அங்குல கலங்கல் யங் ஜிஞ்சர்
4 பல் பூண்டு
3 கொத்தமல்லி வேர்கள்
2 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள் நறுக்கியது
3 சின்ன வெங்காயம்
6 தாய் பேசில் இலைகள்
¼ தேக்கரண்டி மல்லி தூள்
1 தேக்கரண்டி சீரகம்
¼ தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
card 3
மற்ற மூலப்பொருள்கள்
400 மில்லி தேங்காய் பால்
2 தேக்கரண்டி எண்ணெய்
1 கேரட்
6 பீன்ஸ்
½ கப் மஞ்சள் பூசணி (நறுக்கியது)
1 சக்கரவல்லி கிழங்கு
8 செர்ரி தக்காளி
1 தேக்கரண்டி லைட் சோயா சாஸ்
1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை அல்லது தேன்
தேவைக்கேற்ப உப்பு
2 காஃபிர் லைம் இலைகள்
card 4
செய்முறை
பச்சை கறி பேஸ்டுக்கான அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸியில் போடவும்.
அதனுடன், வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி வேர்களை சேர்த்து, 1 அல்லது 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து, பேஸ்டாக அரைக்கவும்.
இதற்கிடையில், சக்கரவல்லி கிழங்கு, மஞ்சள் பூசணி, கேரட் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை ¾ கப் தண்ணீரில் சமைத்து,பாதி அளவு வெந்ததும், தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு, 1 & ½ கப் புதிய தேங்காய் துருவலில் இருந்து கெட்டியான பாலை பிரித்தெடுத்து பயன்படுத்தவும்.
கடையில் கிடைக்க கூடிய ரெடிமேட் தேங்காய் பாலும் பயன்படுத்தலாம்.
பிறகு, ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, தாய் கறி விழுதை (3-4 டீஸ்பூன்) சேர்த்து, மணம் வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
card 5
செய்முறை
அதன் பிறகு, அதனுடன் தேங்காய் பால், சோயா சாஸ், தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர், வேகவைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். இவை அனைத்தும், மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது, கடைசியாக பாதியாக நறுக்கிய செர்ரி தக்காளியைச் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கடைசியாக 2 கஃபிர் லைம் இலைகளை தூவி, பரிமாறவும்.