
ஈவினிங் ஸ்னாக்சிற்கு, சுவையான தாய் கார்ன் பிரிட்டர்ஸ் செய்து பாருங்கள்
செய்தி முன்னோட்டம்
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸாக, சத்தான உணவை செய்து தர வேண்டும் என விரும்புகிறீர்களா?
உங்களுக்காகவே இந்த தாய் கார்ன் பிரிட்டர்ஸ்!
தாய் உணவுகளில் ஸ்டார்டர் வகைகளில் ஒன்றான இந்த உணவு, செய்வதும் எளிது. இதற்கு தேவையான பொருட்கள், உங்கள் வீட்டிலேயே இருக்க கூடிய சாமான்கள் என்பதால், இதற்கு தனிப்பட்ட செலவும் இல்லை.
இதை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தால், உங்கள் வீடு சுட்டிஸ் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
card 2
தேவையான பொருட்கள்
2 கப் ஸ்வீட் கார்ன் கர்னல்கள்
3 தேக்கரண்டி மைதா மாவு
1.5 தேக்கரண்டி அரிசி மாவு
தேவைக்கேற்ப உப்பு
1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
ஆழமாக வறுக்க எண்ணெய்
கரகரப்பாக அரைக்க
4 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
3 பல் பூண்டு
1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள், நறுக்கியது
1 கொத்தமல்லி வேர் (விருப்பப்பட்டால்)
card 3
செய்முறை
சோளத்தை மைக்ரோவேவ் செய்யக்கூடிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து, 4 நிமிடம் ஹை-இல் சமைக்கவும்.
மறுபுறம், அரைக்க வேண்டிய பொருட்களை, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து "கரடுமுரடாக" அரைக்கவும்.
பின்னர், சமைத்த சோளம், அரைத்த பொருள், மிளகுத் தூள், மாவு, உப்பு, தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் கொண்டு கலக்கவும்.
வடை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அதனால், அதற்கேற்ப மாவு அல்லது தண்ணீரை சரிசெய்யவும்.
பின்னர், ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, இந்த மாவை, பஜ்ஜி போல தட்டி, எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
இதை மிதமான சூட்டில் வைத்து செய்ய வேண்டும்.
அனைத்து வடைகளையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான Thai Corn Fritters தயார்!