புரட்டாசி ஸ்பெஷல்: மட்டன் சுவையில், பலாக்காய் சுக்கா வறுவல்
முக்கனிகளில் ஒன்றான பலாபழத்தின், பிஞ்சு, பழம், கொட்டை என அனைத்துமே சமையலுக்கு உகந்த பொருளாகும். இதை கொண்டு, சுக்கா, பாயசம், பொரியல், குழம்பு என பலதரப்பட்ட உணவு வகைகளை சமைக்கலாம். இந்த புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்காகவே இன்றைய ஸ்பெஷல் ரெசிபி. பலாமஸ் காய் என்று அழைக்கப்படும் இந்த பிஞ்சு பலகை வைத்து, மட்டன் சுவைக்கு ஈடான பலாக்காய் சுக்கா வறுவல் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்:
பிஞ்சு பலாக்காய் - 1/2 கிலோ வெங்காயம் - 1 துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன் நசுக்கிய பூண்டு - 6 காய்கள் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - 2 டீஸ்பூன் வறுத்து அரைக்கவும்: கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் (சோம்பு) - 1/2 தேக்கரண்டி மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை
பலாப்பழத்தை வெட்டுவது போலவே, கத்தியிலும், கைகளிலும் எண்ணெய் தடவி, பலாக்காயை நறுக்க வேண்டும். மேல் தோலை நீக்கிவிட்டு, பெரிய பெரிய துண்டுகளாக அறிந்துகொள்ளவேண்டும். அந்த துண்டுகளை தண்ணீரில் பால் கரை நீங்கும் வரை நன்றாக அலசி, மோர் தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்னர், ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கிய பலாக்காயை சேர்த்து 2 விசில் விடவும் வெந்தவுடன், தண்ணீரை வடிகட்டி, பலாக்காயை ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆற விடவும்.
செய்முறை
மறுபுறம், அரைக்க வேண்டிய பொருட்களை, ஒன்றன்பின் ஒன்றாக வாணலியில், வாசனை வரும்வரை லேசாக வறுக்கவும். சூடு ஆறிய பின்னர், அவற்றை பொடியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பொடியை, நறுக்கிய பலாக்காயோடு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் மிதமான தீயில், ஒரு சட்டியில், சிறிதளவு எண்ணெய் சேர்த்து, சீரகம், அரிந்த வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன், துருவிய இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
செய்முறை
அனலை குறைத்து, லோ ஃபிளேமில் வைத்து, பிசறி வைத்துள்ள பலாக்காயை அதனுடன் சேர்க்கவும். ஏற்கனவே பலாக்காயில் உப்பு சேர்த்துள்ளதால், வெங்காயத்திற்கு மட்டும் தேவையான உப்பை சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல், மிதமான தீயிலேயே 10 நிமிடங்கள் வேக விடவும். தேவைப்பட்டால், சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இழைகளை தூவி பரிமாறவும். அவ்வளவுதான், மட்டன் சுவையில், சூப்பரான பல்லாக்காய் சாப்ஸ் தயார்.