மாலைநேர ஸ்னாக்சிற்கு Mozzarella Cheese ஸ்டிக்ஸ் செய்யலாமா?
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவான சீஸ்-ஐ, பல விதமாக செய்து உணவகங்களில் நம்மை கவர்வதுண்டு. அப்படி ஒரு உணவு தான் Mozzarella Cheese ஸ்டிக்ஸ். இந்த ஸ்டார்டர் உணவை நாம் இதுவரை ரெஸ்டாரன்டில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்போம். இப்போது அதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ், பிரெட் அல்லது மைதா மாவில் சீஸ் கட்டிகளை கோட் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை எண்ணெயில் பொரிக்கலாம் அல்லது தவாவில் எண்ணையில்லாமல் வறுக்கலாம். மோஸ்சரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ் செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்
மோஸ்சரெல்லா பிளாக் (block) சீஸ் - 200 கிராம் ரொட்டி துண்டுகள்-தேவையான அளவு மைதா - 3/4 கப் மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி சோளமாவு - 1/4 கப் இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி பிரட் தூள் எண்ணெய் - பொரிப்பதற்கு சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி உப்பு-தேவையான அளவு மிளகுத் தூள்
செய்முறை
சீஸை கோட் செய்ய, பிரெட் தூளை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிரெட் தூளில், உப்பு, மிளகுத் தூள், 1 டீஸ்பூன் இட்டாலியன் சீசனிங், 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு தண்ணீர் அனைத்தையும் கலந்து கொள்ளுங்கள். மாவு பதம், மிகவும் தனியாகவும் இருக்கக்கூடாது, கெட்டியாகவும் இருக்க கூடாது. வெட்டிவைத்த மொஸெரெல்லா சீஸ் துண்டுகளுடன், மாவு நன்றாக கோட் செய்யும் அளவு திக்காக இருக்க வேண்டும். பின்னர், மொஸெரெல்லா சீஸ் 200 கிராம் எடுத்துக் கொண்டு விருப்பபட்ட அகலத்தில், நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை
இப்போது, வெட்டி வைத்திருக்கும் சீஸ் ஸ்டிக்கை, தயார் செய்து வைத்துள்ள மாவில் முழுவதுமாக நனைத்து கொள்ளுங்கள். பின்னர், தனியாக பிளேட்டில் வைத்துள்ள பிரெட் தூளில், சீஸ் துண்டை பிரட்டவும். பின்னர், மீண்டும் மாவில் ஒரு முறை நனைத்து எடுங்கள். பின்னர் திரும்பவும் பிரெட் தூளில் வைத்து உருட்டுங்கள். இப்படி இரண்டு முறை செய்த பின்னர், மாவும், பிரட் தூளும் சீஸ் உடன் நன்றாக ஒட்டி விடும். இதேபோல், அனைத்து சீஸ் துண்டுகளையும் தயார் செய்து தனியாக ஒரு பிளேட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை
பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது நன்கு சூடான பிறகு, தயார் செய்து வைத்த சீஸ் ஸ்டிக்கை பொரித்து எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் நிறைய ஸ்டிக்குகளை கடாயில் போட வேண்டாம். சீஸ் சீக்கிரம் உருகிவிடும். இந்த ஸ்டிக்ஸ் தங்க நிறத்தில் பொரிந்ததும் எடுத்து விடுங்கள். ருசியான மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ் ரெடி! இதை தக்காளி சாஸ்-உடன் பரிமாறவும்