சமையல் குறிப்பு: மதுரை ஸ்பெஷல் கறி தோசை, ஆனால் இறைச்சி இன்றி!
செய்தி முன்னோட்டம்
மதுரை, கோவில்களுக்கு மட்டும் பிரபலமில்லை. சுவையான உணவுகளுக்கும் பிரபலமானது.
அதிலும் விதவிதமான அசைவ உணவுகள், மதுரையின் தெருக்கடைகளில் கூட கிடைக்கும். அதில் ஒன்று கறி தோசை!
மிருதுவான தோசையின் மீது, கறி குழம்பை ஊற்றி, அதன் மேல் முட்டை சேர்த்து பரிமாறப்படும் இந்த உணவு, பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.
ஆனால், இன்று, அதே கறி தோசையை, சைவ பிரியர்களுக்காகவே சற்று மாற்றி, இறைச்சிக்கு பதிலாக புரத சத்து நிறைந்த, அதே சுவையுடன் கூடிய சோயா கீமாவுடன் செய்வது எப்படி என்பதை பார்க்கவிருக்கிறோம்.
card 2
தேவையான பொருட்கள்
தோசை மாவு
2 கப் சோயா சங்க்ஸ்
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்
1 துண்டு இலவங்கப்பட்டை
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
2 தேக்கரண்டி மிளகாய் தூள்
2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
¼ கப் தண்ணீர்
சுவைக்கு உப்பு
2 டீஸ்பூன் வறுத்த பருப்பு பொடி/ இட்லி பொடி
4 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
வெங்காயம் & கொத்தமல்லி இலைகள் தாளிக்க
தோசை சுடுவதற்கு தேவையான எண்ணெய்
card 3
செய்முறை
ஒரு கடாயில், தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நறுக்கப்பட்ட சோயா துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்ததும், கடாயை ஒரு மூடியால் மூடி வைக்கவும்.
சோயா துண்டுகளை குறைந்தது 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்னர் அதை வடிகட்டி, குளிர்ந்த நீரில் கழுவி, சோயாவை தண்ணீரின்றி பிழிந்து எடுக்கவும்.
அடுத்ததாக, சோயா துண்டுகளை, ஒரு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
card 4
செய்முறை
கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் பெருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும். சில வினாடிகள் வதக்கியதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை, சுமார் 1 நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள் சேர்த்து, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
3 நிமிடங்கள் கழித்து, ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
2 நிமிடங்கள் வரை மசாலா கொதிக்கட்டும்.
மிகவும் கெட்டியாக இருப்பதாக உணர்ந்தால், மேலும் ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது தயாராகவுள்ள அந்தத் மசாலா கலவையுடன், அரைத்த சோயா கீமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
card 5
செய்முறை
தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 முதல் 8 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும்.
பருப்பு பொடியையும் சேர்த்து, நன்கு கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து புரட்டினால், உங்கள் சோயா கீமா தயார்.
இப்போது தோசை கல்லில், சிறிய சைஸ் ஊத்தப்பம் போல தோசை ஊற்றவும். அதில் 2 முதல் 3 டீஸ்பூன் சோயா கீமாவை சமமாக பரப்பவும்.
பின்னர் அதன் மேலே வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவவும்.
எண்ணெய் ஊற்றி, தோசையை, குறைந்த வெப்பத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக விடவும்.
கவனமாக பிரட்டி, 4 முதல் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும். சூப்பரான கறி தோசை தயார்! சட்னி சாம்பாருடன், சூடாக பரிமாறவும்.