
புது வகையான பிரட் ஊத்தப்பம் ட்ரை செய்வோமா?
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியா உணவுகளில் பிரதானமான உணவு, இட்லியும் தோசையும் தான். அதில் தோசையில் பல வகைகள் உண்டு.
தோசை, ஊத்தப்பம், ரவா தோசை, பொடி தோசை, ஆனியன் ஊத்தப்பம், தக்காளி ஊத்தப்பம், இன்னும் ஏராளம்.
ஆனால் எப்போதேனும் பிரெட் ஊத்தப்பம் பற்றி கேள்வி பட்டதுண்டா?
தோசை மாவு இல்லாமலையே செய்யக்கூடிய உணவு இது. அதுவும் நொடியில் தயார் செய்யக்கூடியது.
இதன் செய்முறையை இங்கே பார்க்கலாம்
card 2
தேவையான பொருட்கள்
பிரட்: 4 துண்டுகள்
ரவை: 1/2 கப்
தயிர்: 1/4 கப்
எண்ணெய்: 2 டீஸ்பூன்
வெங்காயம்: 2 டீஸ்பூன் நறுக்கியது
தக்காளி: 1 டீஸ்பூன் நறுக்கியது
கேப்சிகம்: 1 டீஸ்பூன் நறுக்கியது
கேரட்: 1 டீஸ்பூன் நறுக்கியது
பச்சை மிளகாய்: 2 நறுக்கியது
இஞ்சி: 1/2 டீஸ்பூன் நறுக்கியது
கொத்தமல்லி இலைகள்: 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் தூள் தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா: 1/2 டீஸ்பூன்
அம்சுர் பவுடர்: 1/4 டீஸ்பூன்
சீரக தூள்: 1/4 டீஸ்பூன்
card 3
செய்முறை
பிரட் துண்டுகளை, ஒரு கட்டர் கொண்டு வட்ட வடிவில் வெட்டுங்கள்.
பின்னர் ஒரு கிண்ணத்தில், ரவை, தயிர், காய்கறிகள், மசாலாப் பொருட்களை போடு, நன்றாக கலக்கவும்.
30 நிமிடங்கள் ஊற விடவும்.
இப்போது ரவை நன்றாக ஊறி இருக்கும். மீண்டும் அனைத்து பொருட்களையும் நன்கு கலந்தது, தோசை மாவு பதத்தில் இருப்பதை உறுதி செய்யவும்.
கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
card 4
செய்முறை
இப்போது அடுப்பில், தோசை கல்லை வைத்து, சூடான தவாவில் எண்ணெய் தடவி, ஒரு துண்டு பிரட் ஸ்லைஸை அதில் போடவும்.
அதன் மேல், ஒரு கரண்டி, தயார் செய்து வைத்துள்ள தோசை மாவை ஊற்றவும். மிதமான தணலில் வேக வைக்கவும்.
1 - 2 நிமிடங்களுக்கு பிறகு, பிரட் ஸ்லைஸை திருப்பி போட்டு, அதன் மறுபக்கத்தில் தோசை மாவை ஊற்றவும்.
மீண்டும் பிரட்டி போடவும்.
இரு பக்கமும் நன்றாக வெந்ததும், இந்த தோசையை, உங்களுக்கு விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.