பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
செய்தி முன்னோட்டம்
பருவமழை காலங்களில் களைகட்டும் பல சுற்றுலா தலங்கள் இருக்கிறது.
அருவிகள், மலர் கண்காட்சிகள் போன்றவைகளை பருவமழை காலத்தில் சென்று பார்ப்பதே ஒரு தனி சுகம் தான்!
அதிலும், சில சுற்றுலா தலங்கள் பருவமழை காலத்தில் மட்டுமே இயங்கக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.
அப்படிப்பட்ட, பருவமழை காலத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 4 முக்கிய இந்திய சுற்றுலா தலங்களை இப்போது பார்க்கலாம்.
பூக்களின் பள்ளத்தாக்கு, உத்தரகாண்ட்
மலையேறுவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், உத்தரகாண்டில் உள்ள மலர்கள் பள்ளத்தாக்கு இருக்கும் தேசிய பூங்காவிற்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான இந்த பூங்காவில், மழைக் காலத்தில் மட்டுமே பூக்கும் ஆர்க்கிட்கள் மற்றும் அரிதான ஆல்பைன் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சஜிக்
மின்மினிப் பூச்சி திருவிழா, மகாராஷ்டிரா
ஒவ்வொரு ஆண்டும், பருவமழை வருவதற்கு முன்பு, மகாராஷ்டிராவின் புருஷ்வாடியில் மின்மினிப் பூச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது.
பருவமழைக்கு முன்பு, மின்மினிப் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால், இந்த காலகட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மின்மினிப் பூச்சிகளை இந்த திருவிழாவில் காண முடியும்.
துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா
கோவா மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி பருவமழைக் காலத்தின் போது மட்டுமே அதன் முழு அழகையும் பெறுகிறது என்பதால் இதை 'மிஸ்' பண்ணிடாதீங்க!
சோர்லா மலைத்தொடர்ச்சி, கோவா
இந்த மலைத்தொடர்ச்சியில் உள்ள மரங்களில் வளரும் சிறிய மைசீனா காளான்கள் இரவுகளில் நியான் பச்சை நிறத்தில் மின்னக்கூடிய தன்மை உடையவை. அதனால், இந்த மலைக்காடுகள் 'அவதார்' திரைப்படத்தில் வரும் வேற்றுகிரகம் போல் இரவுகளில் மாறிவிடுமாம்.