Loading...
9 மாதங்கள் டயாலிசிஸ் தேவையில்லை! மனித உடலில் 271 நாட்கள் இயங்கிய பன்றி சிறுநீரகம்; உறுப்பு மாற்று சிகிச்சையில் திருப்புமுனை
மனித உடலில் 271 நாட்கள் இயங்கிய பன்றி சிறுநீரகம்

9 மாதங்கள் டயாலிசிஸ் தேவையில்லை! மனித உடலில் 271 நாட்கள் இயங்கிய பன்றி சிறுநீரகம்; உறுப்பு மாற்று சிகிச்சையில் திருப்புமுனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2026
02:08 pm

செய்தி முன்னோட்டம்

மனித உடலில் மாற்றி அமைக்கப்பட்ட மரபணு கொண்ட பன்றி சிறுநீரகம் சாதனை அளவாக 271 நாட்கள் வெற்றிகரமாக இயங்கி மருத்துவ உலகில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. தி லேன்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பன்றி சிறுநீரகத்திலிருந்து மனித சிறுநீரகத்திற்கு நோயாளி வெற்றிகரமாக மாறிய முதல் சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது.

9 மாதங்கள்

9 மாதங்களாக டயாலிசிஸ் இன்றி வாழ்ந்த நோயாளி

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரை சேர்ந்த 68 வயதான டிம் ஆண்ட்ரூஸ் என்பவர் இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு 2025 ஜனவரி 25 அன்று போஸ்டன் மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையில் பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் அவர் தொடர்ந்து 271 நாட்கள் (சுமார் 9 மாதங்கள்) டயாலிசிஸ் சிகிச்சை எதுவுமின்றி இயல்பாக வாழ்ந்தார்.

பின்னர் அவருக்குப் பொருத்தமான மனித சிறுநீரகம் கிடைத்ததும், அது வெற்றிகரமாகப் மாற்றியமைக்கப்பட்டது.

மாற்று உறுப்புகள்

மாற்று உறுப்பு பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி

உலகளவில் சிறுநீரக தானத்திற்காகப் லட்சக்கணக்கான நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த பற்றாக்குறையைப் போக்க வேறு உயிரினங்களின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் ஜெனோடிரான்ஸ்பிளான்டேஷன் முறையை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மனித உறுப்புகளின் அளவு மற்றும் செயல்பாட்டிற்கு ஒத்திருப்பதால், மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் சிறுநீரகங்கள் இச்சிகிச்சைக்குப் பெரிதும் ஏற்றதாகக் கருதப்படுகின்றன.

ADVERTISEMENT

எதிர்காலம்

எதிர்கால மருத்துவத்தின் தற்காலிகப் பாலம்

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அந்நிய உறுப்புகளை நிராகரிப்பது இதில் பெரும் சவாலாக உள்ளது.

இருப்பினும், ஆண்ட்ரூஸின் வழக்கு பன்றி சிறுநீரகங்கள் மனித தான உறுப்பு கிடைக்கும் வரை ஒரு தற்காலிகப் பாலமாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

தற்போது மனித சிறுநீரகம் பெற்று ஆரோக்கியமாக உள்ள ஆண்ட்ரூஸ், இந்த முயற்சி எதிர்காலத்தில் சிறுநீரக நோயாளிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT