கூட்ட நெரிசலை தவிர்த்து, நியூ இயர் லாங் வீக்கெண்ட்-ஐ கொண்டாட, சில ரம்மியமான சுற்றுலா தலங்கள் உங்களுக்காக!
செய்தி முன்னோட்டம்
2024 புத்தாண்டு, நீண்ட வார இறுதியுடன் வருவதால், மாசுபட்ட நகரங்களின் சலசலப்பான கூட்டத்தில் இருந்து தப்பிக்க, பலர் அமைதியான சுற்றுலா தலங்களை தேடி செல்வார்கள்.
ஆனால் அதே நேரத்தில், நகர கூட்டத்திலிருந்து தப்பித்து மீண்டும் அதே கூட்டத்திற்கிடையே சிக்கிக்கொள்ள கூடாது.
குறிப்பாக இது போன்ற விடுமுறை நாட்களில் கூட்டமான இடங்களுக்கு சென்று அவதிப்படுவதை தவிர்க்க, பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
விடுமுறை நாட்களில் நிம்மதியாகவும், குடும்பத்தாருடன் என்ஜாய் செய்வதற்கு சில சுற்றுலா இடங்களை நாங்கள் உங்களுக்கு தேர்வு செய்து தருகிறோம்.
card 2
லோலேகான், மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மலைகளில் உள்ள லோலேகான், அதன் அதிகம் அறியப்படாத அழகால் உங்களை வியக்க வைக்கிறது.
டார்ஜிலிங்கில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்திலிருந்து தப்பித்து, பைன் மரங்களால் ஆன நிலப்பரப்புகளின் நீங்கள் விரும்பும் அமைதியை பெறலாம்.
அதோடு, இமயமலையின் பரந்த காட்சிகளை கண்டு மகிழுங்கள், அடர்ந்த காடுகளில் நிதானமாக ட்ரெக்கிங் செல்லுங்கள்.
இந்த பரவலாக அறியப்படாத சுற்றுலாத்தலம் வழங்கும் தனிமையை ரசியுங்கள்.
லோலேகான் உங்களுக்கு அமைதியான புத்தாண்டு கொண்டாட்டத்தை தரும்.
காரணம், அது நகரத்தின் சலசலப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.
card 3
கோகர்ணா, கர்நாடகா
கர்நாடகாவின் கோகர்ணாவின் சூரியன் முத்தமிடும் கடற்கரைகளை காண கண் கோடி வேண்டும்.
இந்த கடலோர நகரம், வெளி உலகிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்ட ரகசியமாகவே உள்ளது. அதனால் புத்தாண்டுக்கு ஓய்வு பெற விரும்புவோருக்கு ஏற்றது.
கோகர்ணாவின் அழகிய கடற்கரைகளில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.
பழங்கால கோவில்களை ஆராயுங்கள், கோகர்ணாவின் அமைதியில் ஓய்வெடுங்கள்.
நெரிசலான பார்ட்டிகளுக்கு குட்பை சொல்லி, ஒரு தனித்துவமான மற்றும் அமைதியான கொண்டாட்டத்திற்காக அமைதியான கடற்கரையினில் உங்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகுங்கள்.
card 4
டாவ்கி, மேகாலயா
மேகாலயாவில் உள்ள டாவ்கி, வழக்கமான புத்தாண்டு பரபரப்பிலிருந்து இருந்து விலகி, இயற்கையான நிம்மதியை வழங்குகிறது.
இந்த ஊர் அதன் படிக-தெளிவான நதியான, உம்ங்கோட்டிற்கு பிரபலமானது.
இந்த தெளிவான நீரில் படகு சவாரி செய்தும், பசுமையால் சூழபட்ட இடத்தில் நீங்கள் நிச்சயமாக மனஅமைதி அடைவீர்கள்.
இந்த ஊரை விசிட் செய்து, நெரிசலான சுற்றுலாத் தலங்களில் இருந்து விடைபெற்று, புத்தாண்டை அமைதியாக வரவேற்க தயராகுங்கள்.
card 5
ரான் ஆஃப் கட்ச், குஜராத்
நகர்ப்புற குழப்பத்தில் இருந்து தப்பி, குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் என்ற பரந்த உப்பு பாலைவனத்திற்குச் செல்லுங்கள்.
இந்த அழகான நிலப்பரப்பு, தனித்துவமான புத்தாண்டு அனுபவத்தை விரும்புவோருக்கு ஒரு புகலிடமாகும்.
நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தின் கீழ் முகாமிட்டு, ரான் உத்சவின் கலாச்சார கொண்டாட்டத்தை கண்டு, உப்பளத்தின் பரந்த நிலப்பரப்பில் உங்களை மெய்மறக்கலாம்.
ரான் ஆஃப் கட்ச் ஒரு அற்புதமான ஆஃப்பீட் கொண்டாட்டத்தை நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.