வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள்
வீட்டின் உட்புற அழகை மேம்படுத்த பலர் வீட்டிற்குள்ளும் செடிகளை வளர்க்கிறார்கள். சில செடிகள் மருத்துவ குணங்கள் உடையது என்றும், அவற்றை வீட்டிற்குள் வளர்த்தால் நன்மைகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், வாஸ்து சாஸ்திர நிபுணர்கள், சில செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதால், எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். அது எவ்வகை செடிகள் என்று பார்ப்போமா? கற்றாழை/கள்ளி செடி: வீட்டிற்கு அழகு சேர்க்கும் என்பற்காக கள்ளி செடிகளும், கற்றாழை செடிகளும் வைப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் வாஸ்து சாஸ்திர படி, வீட்டிற்குள் வைக்கப்படும் முட்செடியினால், உங்களுக்கு துரதிருஷ்டங்கள் ஏற்படலாம். போன்சாய்: செயற்கையாக வளர்க்கப்படும் இந்த குட்டி செடிகள், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், வீட்டிற்குள் வைக்க கூடாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இறந்த செடிகளை வெளியேற்றுங்கள்
மருதாணி: திருமணம் போன்ற மங்கள நிகழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கும் மருதாணி செடியை, வீட்டிற்குள் வளர்க்க கூடாது. இந்த செடியை தீய சக்திகள் எளிதில் அண்டும் என்பதால், இதை வீட்டிற்குள் வைக்க கூடாது என்கின்றனர் வாஸ்து வல்லுநர்கள். பருத்தி செடி: தொட்டிகளில் அழகாக இருக்கும் இந்த பனி வெள்ளை நிற தாவரங்கள், வீட்டிற்குள் வளர்வதால் துரதிர்ஷ்டம் ஏற்படும் எனவும், பலவித எதிர்மறை விளைவுகள் ஏற்படும் எனவும் கூறுகிறார்கள். இறந்த தாவரங்கள்: வாஸ்துபடி, பச்சை மற்றும் புதிய தாவரங்கள் நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும். அதே நேரத்தில், இறந்த இலைகள் அல்லது செடிகள், வீட்டிற்குள் கெட்ட சகுனங்களை ஏற்படுத்தும். அதனால், பட்டு போன இலைகளையும், இறந்த செடிகளையும் வெளியில் வைக்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.