NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள்
    உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள்
    வாழ்க்கை

    உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 29, 2023 | 09:00 am 1 நிமிட வாசிப்பு
    உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள்
    கோடை காலத்தில், வியர்வையினால் குழந்தைகளுக்கு ஏற்படும் உப்பு சத்து குறைபாட்டை தவிர்க்கவும், சோர்வை குறைக்கவும் உதவும் இயற்கையான பானங்கள்

    சமீபத்தில், பிரபலமான ஹெல்த் ட்ரிங்க் அன்று பலராலும் தேர்வு செய்யப்பட்ட Bournvita-வின் மூல பொருட்கள் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் பேசியது வைரலானது. இதற்காக, சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது போன்ற பானங்களை தவிர்த்து, இயற்கையான சத்து பானங்களை குழந்தைகளுக்கு வழங்குவது சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கோடை வெயிலை சமாளிக்கவும், குழந்தைகளுக்கு தருவதற்கு ஏதுவான சூப்பர் ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் இதோ: இளநீர்: கோடைகாலத்து அற்புத பானமாக விற்பனையாகும் இளநீரை, தினசரி காலையில் குடித்து வரலாம். இது உடலுக்குத் தேவையான கனிமச்சத்துகளையும் வழங்கும். கோடை விடுமுறையில், குழந்தைகள் வெளியே விளையாட செல்லுமுன்னர் இளநீர் பருகி செல்வது நல்லது.

    உப்பு சத்து குறைபாட்டை தவிர்க்கவும், சோர்வை குறைக்கவும் உதவும் பானங்கள்

    மோர்: நீர் மோரை குடித்தால் நீர்ச்சத்து குறையாது என்பதோடு, செரிமானம் சார்ந்த பிரச்சனைகளும் தீரும். இதில் உப்பு சத்து இருப்பதால், வியர்வையினால் வெளியேறும் உப்பு சத்தை ஈடு செய்கிறது. லெமன் ஜூஸ்: உப்பும், சர்க்கரையும் கலந்த லெமன் ஜூஸ், வைட்டமின்கள் நிறைந்தது. சிறிது வளர்ந்த பிள்ளைகளுக்கு அதில் புதினாவும் கலந்து தரலாம். குளிர்ச்சியை தரும் இந்த ஜூஸ், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கேப்பை கூழ்/ராகி மால்ட்: அனைத்து வயதினரும் பருகும் சத்துபானம் ஆகும். இதை காலை வெறும் வயிற்றிலேயே பருகலாம். பலவித ஊட்டச்சத்துகள் நிரம்பிய இந்த பானம், குழந்தைகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தர்பூசணி: கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் தர்பூசணி பழங்களை ஜூஸ் அரைத்து தரலாம். உடல் சூட்டை தணிக்க உதவும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    குழந்தைகள் உணவு
    குழந்தைகள் ஆரோக்கியம்
    குழந்தை பராமரிப்பு
    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் உணவு

    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் ஆரோக்கியம்
    ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? உடல் ஆரோக்கியம்
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா அமெரிக்கா
    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவு குறிப்புகள்

    குழந்தைகள் ஆரோக்கியம்

    குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது - 5 டிப்ஸ் மன அழுத்தம்
    பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள் குழந்தை பராமரிப்பு
    உங்கள் மகனிடம், இந்த வாக்கியங்களை உபயோகிப்பது, தவறான உதாரணமாக மாறும் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி? குழந்தை பராமரிப்பு

    குழந்தை பராமரிப்பு

    மருத்துவம்: இரட்டை குழந்தைகள் பிறக்க காரணம் என்ன? குழந்தை பராமரிப்பு
    அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா? குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள் குழந்தை பராமரிப்பு
    குறையும் திருமணங்கள்; சரியும் பிறப்பு விகிதம்; கவலையில் தென்கொரியா உலகம்

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோர்களே, WFH செய்கிறீர்களா? வேலையையும், குடும்பத்தையும் நிர்வாகிக்க உங்களுக்கான டிப்ஸ் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ! குழந்தைகள் ஆரோக்கியம்
    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள் குழந்தை பராமரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023