மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்
ஆயுர்வேதம் என்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பண்டைய மருத்துவ முறையாகும். 5,000 ஆண்டுகள் பழமையானது என்றாலும், இன்றும், இது பல நோய்களிலிருந்து மக்களைத் தடுக்க உதவும், ஒரு குணப்படுத்தும் நடைமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின் பல தயாரிப்புகள், தலைமுறை தலைமுறையாக நம் வீட்டில் ஒரு பகுதியாக இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆயுர்வேதம் குறித்து பல தவறான தகவல்கள் பரவி உள்ளன. அப்படி தவறாக பகிரப்பட்டு வரும் கட்டுக்கதைகள் சிலவற்றை பற்றி இங்கே காணலாம். கட்டுக்கதை: ஆயுர்வேத சிகிச்சை முற்றிலும் பாதிப்பில்லாதது தவறு! ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் அல்லது ஆயுர்வேதமாக இருந்தாலும், பரிந்துரைக்கப்பட்டபடி எடுக்கப்படாவிட்டால், பக்க பக்கவிளைவுகள் நிச்சயம் ஏற்படும். எப்போதும், சுய-மருத்துவத்தில் ஈடுபடக்கூடாது.
ஆயுர்வேதம் உங்கள் நோயின் அடிப்படையிலிருந்து குணப்படுத்தும்
கட்டுக்கதை: சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ள முடியும் ஆயுர்வேத சிகிச்சையை நாடும்போது, இறைச்சிகளை உண்ணக்கூடாது என கட்டாயப்படுத்தபடமாட்டிர்கள். மாறாக, உங்கள் உடல் ஒவ்வாமைக்கு தகுந்தாற் போல, உணவை வேளையை மாற்ற அறிவுறுத்தப்படலாம். கட்டுக்கதை: ஆயுர்வேதம், மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறது ஆயுர்வேத மருந்துகளில், மூலிகைகளும், பல மூலிகை அல்லாத பொருட்களும் கலந்துள்ளன. பால், தேன்,நெய் முதல் பல்வேறு வகையான கல் உப்புகள் வரை, எண்ணற்ற பொருட்கள் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல, அனைத்து மூலிகைகளும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படும் என்பதும் பொய்யான தகவல் ஆகும். கட்டுக்கதை: ஆயுர்வேத சிகிச்சையில் குணமாக நேரம் எடுக்கும் எந்த மருத்துவத்திலும், முழுமையாக குணமாக நேரம் ஆகலாம். அது உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது