NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'காளான் 65' செய்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'காளான் 65' செய்வது எப்படி?
    காளான் 65ஐ மாலை வேளையில் தேநீருடன் சூடாக பரிமாறலாம்.

    புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'காளான் 65' செய்வது எப்படி?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    உணவு குறிப்புகள்: காளான் 65 என்பது காளான்களைப் பயன்படுத்தி செய்யப்படும் எளிதான இந்திய ஸ்நாக்ஸ் ரெசிபிகளில் ஒன்றாகும். சிக்கன் 65 பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சைவ உணவு இதுவாகும். இதை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான்- 10

    சமையல் எண்ணெய்

    மாவு கலவைக்கு தேவையான பொருட்கள்:

    மைதா- 1/2 கப்

    சோள மாவு- 1/2 கப்

    சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    இஞ்சி - பூண்டு விழுது - 1.5 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    பெருஞ்சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்குரியது)

    எலுமிச்சை சாறு - சில துளிகள்

    உப்பு மற்றும் தண்ணீர் - தேவைக்கேற்ப

    டிஜிவாக்ஸ்

    'காளான் 65' செய்முறை: 

    காளான்களை கழுவி, அதன் தண்டுகளை நீக்கிவிட்டு, அதை கைகளில் பிடிப்பதற்கு ஏற்ற க்யூப்களாக நறுக்கவும்.

    'மாவு கலவைக்கு தேவையான பொருட்கள்' என்பதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து, தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக பிசையவும்.

    கெட்டியான பஜ்ஜி மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைய வேண்டும்.

    அதன் பிறகு, மாவு கலவையுடன் காளான் க்யூப்ஸ்களை சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பின்னர், நன்றாக எண்ணெயை சூடாக்கி, மாவில் ஊறவைத்த காளான் துண்டுகளை அதில் போட்டு, அதன் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    காளான் துண்டுகள் பொன்னிறமானதும் அதை எடுத்து, ஒரு பேப்பர் டவலில் போட்டு வைக்கவும்.

    இந்த காளான் 65ஐ கெட்ச்அப் உடன் சேர்த்து மாலை வேளையில் தேநீருடன் சூடாக பரிமாறவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு குறிப்புகள்
    உணவு பிரியர்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உணவு குறிப்புகள்

    மூலிகை கரும்புச்சாறு கேள்விப்பட்டதுண்டா? திண்டுக்கல்லில் பிரபலமான இந்த ஜூஸ் பற்றி சில தகவல்கள் ஆரோக்கியம்
    காரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு  வைரல் செய்தி
    ரவா இட்லி உருவான உலகப்போர் கதை தெரியுமா? வைரல் செய்தி
    இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா? இந்தியா

    உணவு பிரியர்கள்

    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு குஜராத்
    'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்? நெட்ஃபிலிக்ஸ்
    உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள் உலகம்
    2 நிமிட நூடுல்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் பொறித்த நூடுல்ஸ் தெரியுமா? உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025