111 வருட பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு வைரலாகிறது
செய்தி முன்னோட்டம்
100 வருடங்களுக்கு மேலாக, மக்களால் இன்றும் மறக்கமுடியாத ஒன்றாக கருதப்படுவது டைட்டானிக் கப்பல். அதற்கு முக்கிய காரணம், 1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் தான்.
நிஜத்தை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்ட அந்த படைப்பில், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது, அதன் பிரமாண்டமே.
'RMS டைட்டானிக்' என்ற பெயரில் உருவான இந்த கப்பல், ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு, ஒரு பனிப்பாறையில் மோதி, உடைந்து, கடலில் மூழ்கியது.
படத்தில் இருப்பது போலவே, கப்பலில் பல வகுப்புகள் இருந்தது.
அங்கிருந்தவர்களுக்கு, அந்தந்த வகுப்பிற்கு தகுந்தாற் போல உணவுகளும் பரிமாறப்பட்டது.
அந்த உணவுகளின் மெனு கார்டு தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்தாலே, ஏதோ கல்யாண விருந்து பீல் வரும் அளவிற்கு, பலவித உணவுகள் பரிமாறப்பட்டது.
card 2
டைட்டானிக் கப்பலின் வரலாறு
டைட்டானிக் கப்பல், தாமஸ் ஆண்ட்ரூஸ் என்பரால் வடிவமைக்கப்பட்டு, ஹார்லாண்ட் மற்றும் வோல்ஃப் ஆகியோரால் கட்டப்பட்டது.
இது உலகின் அதிவேகக் கப்பலாக இருக்கும் வகையில் தான் முதலில் வடிவமைக்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன.
பின்னர் பார்த்தால், அந்தக் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக மாறியது.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இருந்து தொடங்கியது.
கப்பலின் கொள்ளளவு, முதல் வகுப்புப் பயணிகள் 833 பேர், இரண்டாம் வகுப்பில் 614 பேர், மூன்றாம் வகுப்பில் 1,006 பேர், ஆக மொத்தம் 2,453 பயணிகள் என திட்டமிடப்பட்டது.
பிரயாணத்தின் போது, இந்த பயணிகளை கவனித்து கொள்ள 885 பணியாளர்களும் உடன் இருந்தனர்.