HIV தடுப்பில் முக்கிய முன்னேற்றம்: HIVஐ 100 சதவீதம் தடுக்கும் தடுப்பூசி எது தெரியுமா?
தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய மருத்துவ பரிசோதனையின் மூலம் எச்ஐவி தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை லெனகாபாவிர் என்னும் HIV தடுப்பு மருந்து (PrEP) போடுவதால் இளம் பெண்களுக்கு முற்றிலுமாக HIV பாதிப்பதில்லை என்பது அந்த சோதனையில் தெரியவந்துள்ளது, லெனகாபாவிர் தடுப்பூசி HIV தொற்றிலிருந்து இளம் பெண்களை முழுமையாக பாதுகாக்கிறது என்பதை அந்த சோதனை நிரூபித்துள்ளது. லெனகாபவிரும், மற்ற இரண்டு தினசரி மாத்திரை மருந்துகளுக்கு HIVஐ எப்படி தடுக்கிறது என்பதை ஆய்வு செய்ய இந்த சோதனை நடத்தப்பட்டது.
லெனகாவிர்: HIV தடுப்புக்கான புதிய நம்பிக்கை
உகாண்டாவில் உள்ள மூன்று தளங்களிலும் தென்னாப்பிரிக்காவில் 25 தளங்களிலும் இதற்கான முதற்கட்ட சோதனை நடத்தப்ட்டது. இதில் 5,000 பேர் பங்கேற்றனர். ஒரு ஃப்யூஷன் கேப்சிட் தடுப்பு மருந்தான லெனகாபவிர், HIV கேப்சிடில் குறுக்கிடுவதன் மூலம், அந்த வைரஸின் மரபணுப் பொருள் மற்றும் அதை நகலெடுப்பதற்குத் தேவையான என்சைம்களைப் பாதுகாக்கிறது. இந்த சோதனையின் போது, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இளம் பெண்கள் HIV தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்ட்டுள்ளது. முதற்கட்ட சோதனையின் போடு, லெனகாபவிர் தடுப்பூசியை பெற்ற 2,134 பெண்களில் எவரும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படவில்லை. இது அந்த மருந்தின் 100% செயல்திறனைக் காட்டுகிறது.